சசிகலா – ஜெயிலில் இருந்து பெயிலில் நாளை ரிலீஸ்?

சசிகலா – ஜெயிலில் இருந்து பெயிலில் நாளை ரிலீஸ்?

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறை வால் கடந்த மாதம் 10-ந்தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறு நீரகம் செயல் இழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செயல் இழந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா உள்ளிட்ட டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுசீரகம் தானமாக பெறுவதற்காக தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெறப்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அவருக்கு பொருத்தமாக இல்லை. எனவே அவருக்கு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க நெருங்கிய உறவினர்கள் முன் வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடந்த உறுப்பு தானம் கூட்டத்தில் நடராஜன் உறவினர் சங்கர் தனது ஒரு பகுதி கல்லீரலையும், கலாவதி தனது ஒரு சிறுநீரகத்தையும் தானம் கொடுப்பதாக தெரிவித்தனர்.இதையடுத்து நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுசீரகமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “சசிகலாவுக்கு பரோல் கோரி இரண்டு தினங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தோம். நாளை சிறையில் இருந்து சசிகலா பரோலில் விடுக்கப்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!