மே மாதம் 19 ஆம் தேதி ரிலீஸாகுது – சங்கிலி புங்கிலி கதவை தொற!

மே மாதம் 19 ஆம் தேதி  ரிலீஸாகுது – சங்கிலி புங்கிலி கதவை தொற!

அட்லீயின் A for apple நிறுவனம் fox star ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பில் ஜீவா , ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவை தொற படத்துக்கு தணிக்கை குழுவினர் UA சான்றிதழ் வழங்கி உள்ளதையடுத்து மே 19ம் தேதி படம் வெளியாகும் என்று டீம் தெரிவித்துள்ளது.

sangli may 6.

கவலை வேண்டாம்’ படத்தைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் உருவான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜீவா. ப்ரியதர்ஷன், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஐக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்துள்ளார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படம் கோடை கால விடுமுறைக்கு ஏற்றவாறு ரசிகர்களுக்கு உற்ற விருந்தாக அமையும் என்று இயக்குனர் ஜக் தெரிவித்தார்.

மேலும் வர்த்தக ரீதியான விஷயங்களை கோர்வையாக்கி ரசிகர்களுக்கும், திரை வர்த்தகத்தினருக்கும் மிக சிறந்த படமாக வழங்கி இருக்கிறோம். ரசிகர்கள் அச்சப்பட்டும் அதே சமயம் தீவிர  நகைச்சுவை தாக்குதலுக்கும் உள்ளாவார்கள் என்பது உறுதி” என்றும் கூறுகிறார் இயக்குநர் ஜக்.

error: Content is protected !!