சல்மான்கானுக்கு ஜாமீன் கிடைச்சு வீட்டுக்கு போயாச்!

சல்மான்கானுக்கு ஜாமீன் கிடைச்சு வீட்டுக்கு போயாச்!

மான் வேட்டை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய அதே ஜட்ஜ் ஜாமீன் வழங்கியதை அடுத்து உடனடியாக வீட்டுக்கு கிளம்பிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது .

பாலிவுட் நடிகர் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே நடந்த ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். அப்போது, அக்டோபர் 1ஆம் தேதி இரவு, அவர்கள் அங்கு கங்கணி என்ற இடத்தில் உள்ள காட்டுக்கு ஜிப்சி காரில் சென்றனர். காரை ஓட்டிச்சென்ற சல்மான் கான், அங்கு அபூர்வமான கறுப்பு மான்கள் இரண்டை வேட்டையாடியதாகப் புகார் எழுந்தது.இதில் சல்மான் கான் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், பிரிவு 51இன் கீழும், மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 149இன் கீழும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பைத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தேவ் குமார் காத்ரி புதன் கிழமை (ஏப்ரல் 4) அறிவித்தார். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதித்தார். மேலும் வழக்கில் தொடர்புடைய சயீப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு சல்மான் கானின் சார்பாக அவரது வழக்கறிஞர் ஹெச்.எம் சரஸ்வத் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணை இன்றைய தினத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு உணவு இடைவேளைக்குப் பின் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிபதியே தற்போது ஜாமீனும் வழங்கியுள்ளார் என்பதும் ஜாமீன் வழங்கிய ரெண்டு மணி நேரத்தில் ஜெயிலிருந்து ரிலீஸாகி வீட்டுகு போய் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!