ரிசர்வ் வங்கி கவர்னராக ஆள் தேவை விளம்பரம் தரப்பட்டதா? ஆர்.டி.ஐ.விளக்கம்!

ரிசர்வ் வங்கி கவர்னராக ஆள் தேவை விளம்பரம் தரப்பட்டதா? ஆர்.டி.ஐ.விளக்கம்!

நம் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக் கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ‘ஒரு மத்திய அமைச்சர், போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும். நாம் 7 சதவீத வளர்ச்சி அடைய வில்லை’ என்று கூறியது எனக்கு தெரியும்.எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பெயரை அவர் கூறவில்லை என்றாலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தான் இந்த தகவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்ட விவரத்தை தர மத்திய அரசு மறுத்துவிட்டது.

சசிகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப் பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 3 ஆண்டுகளுக்கு இவரை நியமித்தது.

ரிசவர் வங்கியின் தன்னாட்சி மற்றும் அரசின் தலையீடு காரணமான மோதலில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உஜித் பட்டேல் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்தில் ஆள் தேவை விளம்பரம் தரப்பட்டதா? யாரெல்லாம் விண்ணப்பித்தார்கள். அவர்களில் யார் முதன்மையான தகுதிபெற்றவர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக சசிகாந்த தாஸ் நியமனம் குறித்த விவரங்களை தருமாறும் மத்திய அரசிடம் மனுதாரர் கேட்டிருந்தார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனம் தொடர்பான விவரத்தை வெளிப்படையாக தெரிவித்த சட்டவிதிகள் தடை விதிப்பதாகக் கூறி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

1980-ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், 2017-ம் ஆண்டு மே மாதம் பொருளாதார விவகாரத்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற அதிகாரியை மிகவும் உயர்ந்த பதவியான ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்ததை இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இத்தகைய நியமனம் முக்கியமான முடிவுகளின்போது, வேறு விதமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தனர் என்பதும் நினைவுகூறத்தக்க்து.

error: Content is protected !!