இந்தியன் ரயில்வே புரொடக்சன் போர்ஸில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்தியன் ரயில்வே புரொடக்சன் போர்ஸில் ஜாப் ரெடி!

இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் முத்திரை பதித்து வரும் இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படையை பிரத்யேகமாகக் கொண்டது. காவல் படைகளில் பிரபலமான இப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 798 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: கான்ஸ்டபிள் பிரிவிலான இந்த இடங்களில் வாட்டர் கேரியரில் 452, சபாய் வாலாவில் 199, வாஷர்மேனில் 49, பார்பரில் 49, மாலியில் 7, டெய்லரில் 20, காப்ளரில் 22ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விபரம் : மாதம் ரூ.19 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் மெஷர்மென்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500.

கடைசி நாள்: 2019 ஜன., 31

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு