ரயில்வேயின் தொலை தொடர்பு ; ஏர்டெல்லிடமிருந்து ஜியோ-வுக்கு மாறுகிறது!

ரயில்வேயின் தொலை தொடர்பு ; ஏர்டெல்லிடமிருந்து ஜியோ-வுக்கு மாறுகிறது!

இந்திய டெலிகாம் சந்தையில் தனது அதிரடி நடவடிக்கை காரணமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் ஜியோ மட்டுமே நாட்டில் உபயோக்கிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியன் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு ஏர்டெல்லுக்கு பதிலாக வரும் ஜனவரி 1 முதல் ஜியோ சேவை அளிக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டின் தொலைதொடர்பு துறை சேவையில் வோடாபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ, பிஎஸ் என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தான் ஏராளமானனோர் சேவை பெற்று வருகின்றனர். ஏனைய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி அம்பானியின் ஜியோ நிறுவனம் முன்னணியிலேயே இருந்து வருகிறது. ஜியோவின் ஆதிக்கம் காரணமாக ஒருசில நிறுவனங்கள் திவால் ஆனது. ஜியோவின் அதிரடி சலுகை காரணமாக அதிக வாடிக்கையாளர்களை பெற்று தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆறு வருடங்களாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சலுகை கட்டணத்தில் ஏர்டெல் சேவை அளித்து வந்தது. இந்த தொலைபேசியில் குளோஸ்ட் யூசர் குரூப் என்னும் முறையில் ஊழியர்களும் அதிகாரிகளும் கட்டணமின்றி பேச வகை உண்டு. இது போல 1,95,000 இணைப்புக்களை ஏர்டெல் அளித்து வந்தது. இதற்காக ஒவ்வொரு வருடமும் ரெயில்வே ரூ. 100 கோடி கட்டணம் ஏர்டெல்லுக்கு அளித்து வந்தது. இந்த ஒப்பந்தம் வரும் டிசம்பர் 31 உடன் முடிவடைகிறது.

ரெயில்வே தொலை தொடர்பை நிர்வகித்து வரும் ரெயில்டெல் இது குறித்து அனைத்து தொலை பேசி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது கட்டணக் குறைவாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலை தொடர்புக்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் படி ஜியோ நிறுவனம் 4ஜி/3ஜி டேட்டா சேவைகளையும் முழுவதும் இலவசமாக இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களையும் அளிக்க உள்ளது. மிகவும் மூத்த அதிகாரிகளுக்கு மாதம் ரூ.125க்கு 60 ஜிபி டேட்டா வழங்க உள்ளது. இணை செயலர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 99க்கு 45 ஜிபி டேட்டாவும் மற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.67 க்கு 30 ஜிபி டேட்டாவும் வழங்க உள்ளது. இதற்கு மேல் டேட்டா தேவைப்பட்டால் ரூ.10 க்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

முந்தைய ஒப்பந்த தாரரான ஏர்டெல் கட்டணங்களை விட தற்போது மிகக் குறைவாக உள்ளதால் மேலும் பலர் இந்த இணைப்புக்களை விரும்பலாம் என கூறப்படுகிறது. அத்துடன் முன்பு இருந்த 1.95 லட்சம் இணைப்புக்களுக்கு பதிலாக தற்போது 3.78 லட்சம் இணைப்புக்களை முந்தைய ஏர்டெல் கட்டணத்தில் ஜியோ அளிக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அண்மையில் ஏர்டெல் நிறுவனம் ஓட்டுமொத்த 3 ஜி, 4 ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 7.53 எம்பி ஆக இருந்தது.. ஏர்டெல்லுக்கு அடுத்த படியாக ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்பி, 2.70 எம்பி வேகத்தில் வழங்கி வந்தன.இந் நிலையில் ஜியோ மீண்டும் தனது 4ஜி இணைதள சேவையின் வேகத்தை கூட்டி உள்ளது. இதன் காரணமாக ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!