ரூ 2, 999 ல் புதிய ஜியோ போன்; அறிமுகப்படுத்தினார் முகேஷ் அம்பானி – AanthaiReporter.Com

ரூ 2, 999 ல் புதிய ஜியோ போன்; அறிமுகப்படுத்தினார் முகேஷ் அம்பானி

நம் நாட்டில் தற்போதைய நிலையில் தொலைதொடர்பில் டாப் இடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் வரும் ஆகஸ் 15-ம் தேதி முதல் ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ் புக், யூ டியுப் சேவைகளை பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பனி மற்றும் மகள் இஷா அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரிசெலுத்தும் நிறுவனம் ரிலையன்ஸ். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22 மாதத்துக்குள்ளேயே 21.5 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை எட்டியதில்லை. ஜியோ இந்தியாவின் மொபைல் வீடியோ நெட்வொர்க்காக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு எங்களது வாடிக்கையாளர்கள் 219 நிமிடங்களுக்கு அதிகமாக இணைந்துள்ளனர் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, ஜியோ சேவை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவில் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும் பரவியுள்ளது என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 21.5 கோடியாக உயர்ந்துள்ளது ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜிபியிலிருந்து 240 ஜிபியாக அதிகரித்துள்ளது.

மேலும், பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் இந்தியா இன்னமும் பின்தங்கி உள்ளது. பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி எடுத்துள்ளது. பைபர் இணைய சேவையில் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளோம். பைபர் பிராட்பேண்ட் சேவையை இனி ஜியோஜிகாபைபர் என அழைக்கப்படும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 20.6 சதவீதம் உயர்ந்துள்ளது என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். தனியார் துறையில் அதிக வருமான வரி செலுத்து குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என முகேஷ் அம்பானி பேச்சுரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு லாபம் 36,076 கோடி – முகேஷ் அம்பானி அறிவிப்பு. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதையொட்டி இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு உயர்வை கண்டு வருகிறது.

* ஜியோஜிகாபைபர் சேவையை பெறுவதற்கு மைஜியோ மற்றும் ஜியோ.காம் மூலம் பதிவு செய்யலாம்.

* இந்தியாவில் 1,100 நகரங்களில் ஜியோஜிகாபைபர் சேவை தொடங்கப்பட இருக்கிரது.

* ஆனால் இந்தியா முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்ப இணைப்பை ஏற்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* இந்த ஆண்டு 7,500 ரீடெய்ல் ஸ்டோர்கள் அமைக்கப்படும்ஆகஸ்ட் 15-முதல் ஜியோபோன் 2

இதைத் தொடர்ந்து ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி இணைந்து ஜியோ போன் குறித்த ம்ர்ர்லும் சில அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது, ரிலையன்ஸ் ஜியோ போனில் வாட்ஸ் அப், யூடியூப் மற்றும் பேஸ்புக் செயலிகளை பயன்படுத்த முடியும் என அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல் ஜியோ போனை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் செய்திகளை அனுப்ப முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் ஹங்காமா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம், ஜியோ போன் பயன்படுத்துவோர், தங்கள் பழைய போனை 501 ரூபாய்க்கு கொடுத்து அதற்கு பதிலாக புதிய போனை வாங்கிக் கொள்ளலாம். இதனால் 1,500 ரூபாய் என்று இருந்த ஜியோ போனின் விலை 501 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி ஜியோபோன் – 2 விற்பனைக்கு வர இருக்கிறது. அதன் விலை 2,999 ரூபாயாக இருக்கும். மேலும் தகவல்கள் ஜியோவின் இணைய தளத்தில் வெளியாகும்.

“ இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும், ஓவ்வொரு தாலுக்காகளுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் எங்கள் சேவையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ பியூச்சர் போனை அறிமுகப்படுத்தியது. இந்த போன் ரூ. 1,500-க்கு விற்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளமுடியும். அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே இந்த போன் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.