சமூக வலை தளங்களை கண்காணிப்பதன் மூலம் மக்களை கண்காணிக்கிறது! சுப்ரீம் கோர்ட் – AanthaiReporter.Com

சமூக வலை தளங்களை கண்காணிப்பதன் மூலம் மக்களை கண்காணிக்கிறது! சுப்ரீம் கோர்ட்

சமூக வலைத்தளங்களில், விஷத்தை கக்கும் வார்த்தைகள், போலியான செய்திகள், புரளிகள் பரவிவருவது மாநில நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற வதந்திகள் பரவுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் மதச்சாயம் பூசப்படுகிறது. ஆனால் ஆனால் இதைத் தடுக்க திட்டமிட்டு மத்திய அரசு சமூக வலை தளங்களை கண்காணிப்பதன் மூலம் மக்களையே கண்காணிக்கிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

விரைவில் நம் மத்திய அரசு சமூக வலை தளங்களில் வெளியாகும் பதிவுகளை கண்காணிக்க ஒரு அமைப்பு ஒன்றை அமைக்க உள்ளது. இந்த அமைப்பின் மூலம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் கண்காணிக்க இந்த அமைப்புக்கு அரசு அதிகாரம் அளிக்க உள்ளது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் சட்ட உறுப்பினர் மகுவா மொய்ரா ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ளர்.

அந்த மனுவில் அவர் இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த அமர்வின் விசாரணையில் மொய்ராவின் வழக்கறிஞராக சிங்க்வி ஆஜரானார்.இது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள டெண்டர் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவடைகிறது. அதை ஒட்டி அவசரமாக விசாரிக்க வேண்டும் என மொய்ரா சார்பில் சிங்க்வி தெரிவித்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

அத்துடன், “மத்திய அரசின் சமூக வலை தளப் பதிவுகளை கண்காணிக்கும் அமைப்பு ஒவ்வொரு தனி நபரின் பதிவையும் கண்காணிக்கும் அமைப்பாகும். அதாவது இந்த அமைப்பின் மூலம் அரசு மக்களை கண்காணிப்பதாகும். இந்த அமைப்பு குறித்த முழு விவரங்களையும் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை சுப்ரீம் கோர்ட்டுக்குகு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அதாவது இந்த டெண்டர் முடியும் ஆகஸ்ட் 30க்கு மூன்று வாரங்கள் முன்பு அளிக்க வேண்டும்” என சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவிட்டுள்ளது.