பாங்க் ஆப் பரோடாவில் சிறப்புநிலை அதிகாரிகள் பணி வேண்டுமா? – AanthaiReporter.Com

பாங்க் ஆப் பரோடாவில் சிறப்புநிலை அதிகாரிகள் பணி வேண்டுமா?

பொதுத் துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கு முக்கிய இடம் உண்டு. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீனமய சேவைகள், வாடிக்கையாளரை மையப் படுத்திய சேவைகள் என்று சிறப்பு பெறுகிறது. இங்கு சிறப்புநிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 427 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடங்கள் : ஐ.டி., செக்யூரிட்டி 5, கிரடிட் ரிஸ்க் (ஹெட்) 1, என்டர்பிரைஸ் & ஆப்பரேஷனல் ரிஸ்க் 1, டிரஷரி – டீலர்ஸ்/டிரேடர்ஸ் பிரிவில் 3, டிரஷரி ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவில் 2, டிரஷரி – புராடக்ட் சேல்ஸ் பிரிவில் 20, பினான்ஸ் கிரடிட் பிரிவில் 40, பினான்ஸ்/கிரெடிட் (ஸ்கேல் 2) பிரிவில் 140, டிரேடு பினான்ஸ் பிரிவில் 50, செக்யூரிட்டி பிரிவில் 15, விற்பனை சார்ந்த ஜே.எம்.ஜி., (ஸ்கேல் 1) பிரிவில் 150 என மொத்தம் 427 இடங்கள் காலியாக உள்ளன.

வயது : டிரஷரி – டீலர்ஸ்/டிரேடர்ஸ் பிரிவுக்கு 25 முதல் 37 வயது உடையவர்களும், விற்பனை சார்ந்த ஜே.எம்.ஜி., ஸ்கேல் 1 பிரிவுக்கு 21 முதல் 30 வயது உடையவர்களும், இதர பிரிவுகளுக்கு 25 முதல் 35 வயது உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : டிரஷரி – டீலர்ஸ்/டிரேடர்ஸ் பிரிவுக்கு பட்டப்படிப்புடன் பாரக்ஸ், கடன் சந்தைகள் போன்றவற்றில் குறைந்தபட்சம் 3 வருட பணியனுபவம் தேவை. டிரஷரி – ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவுக்கு எம்.பி.ஏ., படிப்பை சேல்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் 2 வருட பணியனுபவம் தேவைப் படும். டிரஷரி – புராடக்ட் சேல்ஸ் பிரிவுக்கு எம்.பி.ஏ., -மார்க்கெட்டிங் படிப்புடன் டிரஷரி குறித்த பணியனுபவம் தேவைப்படும். பினான்ஸ்/கிரெடிட் பிரிவுக்கு சி.ஏ.,எம்.பி.ஏ., பினான்ஸ் அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., தேவைப்படும். டிரேடு பினான்ஸ் பிரிவுக்கு சி.ஏ., எம்.பி.ஏ., – நிதிப்பிரிவு படிப்பு தேவைப்படும். விற்பனை சார்ந்த ஜே.எம்.ஜி., ஸ்கேல் 1 அதிகாரி பதவிக்கு எம்.பி.ஏ., பினான்ஸ் அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பு தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 600 ரூபாய்.

கடைசி நாள் : 2017 டிச., 5.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு