ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் நிறுவப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது. நவோதயா வித்யாலயா சமிதி சார்ந்த கல்வி நிறுவனங்களில் தற்போது காலியாக இருக்கும் 251 காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்:

குரூப் ஏ பிரிவிலான பிரின்சிபலில் 25, இதே பிரிவிலான அஸிஸ்டென்ட் கமிஷனர் – அட்மினிஸ்ட் ரேஷனில் 3, குரூப் சி அஸிஸ்டென்டில் 2, குரூப் சி கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 3, குரூப் பி பிரிவிலான பி.ஜி.டி., பிரிவு முது நிலை ஆசிரியரில் 218ம் சேர்த்து மொத்தம் 251 இடங்கள் காலியாக உள்ளன.

வயது:

பிரின்சிபல் பிரிவுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டென்ட் கமிஷனர் பிரிவுக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பிரிவுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

பிரின்சிபல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்புடன் பி.எட்., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும், இவர்கள் குறைந்த பட்சம் 7 வருட கால பணியனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

அசிஸ்டென்ட் கமிஷனர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே பிரிவிலான பதவியில் 8 வருட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பதோடு பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். 

அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டரில் திறன் தேவைப்படும்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்பான எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜில் பணியாற்றும் திறன் தேவைப்படுவதுடன் ஒரு வருட கால கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

பி.ஜி., டீச்சர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது என்.சி.இ.ஆர்.டி., யின் இரண்டு வருட இன்டக்ரேட்டடு போஸ்ட் கிராஜூவேட் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் பி.எட்., படித்திருந்தால் முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் :

2019 பிப்., 14.

விபரங்களுக்குஆந்தை வேலை வாய்ப்பு