இந்திய ராணுவத்தில் சேர ஓர் வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் சேர ஓர் வாய்ப்பு!

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் பெருமைக்குரியது. இந்தப் படையில் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான முகாம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுகிறது.

பிரிவுகள் : சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் (ஏம்.எம்.என்., / ஏ.வி.என்.,), சோல்ஜர் நர்சிங் டியூட்டி, சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மென், சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆகிய பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் இந்த முகாமின் மூலமாக நிரப்பப்பட உள்ளன.

வயது: சோல்ஜர் ஏ.வி.என்., டிரேட்ஸ்மேன், கிளார்க்/ஸ்டோர் கீப்பர், மற்றும் நர்சிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 23 வயது உடையவராகவும், ஜெனரல் டியூட்டிக்கு விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 21 வயது உடையவராகவும், ஹவில்தார் எஜூகேஷன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 25 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சோல்ஜர் டெக்னிகல் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பும், சோல்ஜர் ஏ.வி.என்., பிரிவுக்கு இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பும், நர்சிங் பிரிவுக்கு அறிவியல் புலத்தில் பிளஸ் 2 படிப்பு அல்லது பி.எஸ்.சி., உயிரியல் படிப்பு தேவைப்படும். ஜெனரல் டியூட்டிக்கு பிளஸ் 2 படிப்பும், டிரேட்ஸ்மேன் பிரிவுக்கு ஐ.டி.ஐ., படிப்பும், கிளார்க் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பும், ஹவில்தார் எஜூகேஷன் பிரிவுக்கு பி.எஸ்.சி. பி.சி.ஏ., பி.எஸ்.சி., ஐ.டி., பி.டெக்., பி.இ., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., ஐ.டி., எம்.டெக்., பி.டெக்., பி.எட்., மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏதாவது ஒரு படிப்பும் தேவைப்படும்.

தேர்ச்சிமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 2017 ஆக. 8

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!