எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி! – AanthaiReporter.Com

எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி!

நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகள், சாட்டிலைட் அலுவலகங்கள், முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகளின் சேவை மையங்கள் என்று 24 மணி நேரமும் மக்களுக்கான தரமான காப்பீட்டுத் தேவைகளை தரும் எல்.ஐ.சி., நிறுவனம் அங்கு காலியாக இருக்கும் 590 உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பிரிவுகள்:

எல்.ஐ.சி.,யின் அஸிஸ்டென்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பணியிடங்கள் ஜெனரலிஸ்ட், ஐ.டி., சார்டர்டு அக்கவுன்டண்ட், ஆக்சுவரியல், ராஜ்பாஷா என்ற உட்பிரிவுகளுடன் உள்ளது.

வயது:

1.3.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

ஜெனரலிஸ்ட் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.டி., பிரிவுக்கு இன்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுன்டண்ட் பிரிவுக்கு பட்டப்படிப்புடன் சி.ஏ., முடித்திருக்க வேண்டும். ஆக்சுவரியல் பிரிவுக்கு ஆக்சுவரியல் சொசைடி ஆப் இந்தியா நடத்தும் ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரையுள்ள தாள்களையும், மேலும் குறைந்த பட்சம் 4 தாள்களையும் முடித்திருக்க வேண்டும். ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு இந்தியில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் அறியவும்.

தேர்ச்சி முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்த்தல் என்ற நிலைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.600/-ஐ எல்.ஐ.சி.,யின் ஏ.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க:

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்:

22.3.2019

விபரங்களுக்கு
:

ஆந்தை வேலைவாய்ப்பு