ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் அவ்வங்கியின் தனி தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டித்தேர்வு வைத்து தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது, குருப் ‘பி’ அதிகாரி பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

rbi may 9

தேவையான தகுதி

இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகிய மூன்றிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது 21 முதல் 30-க் குள் இருக்க வேண்டும். எம்.ஃபில். பட்டதாரிகளாக இருப்பின் 32 வயது வரையும், பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் 34 வயது வரையும் இருக்கலாம்.

மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் குரூப்-பி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 2-வது கட்ட ஆன்லைன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

இதில், மொத்தம் 3 தாள்கள். முதலாவது தாளில் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்க வேண்டும். 2-வது தாள் ஆங்கில அறிவை சோதிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இதற்கு ஆன்லைனில் விரிவாக விடையளிக்க வேண்டும். 3-வது தாளில் நிதி மற்றும் மேலாண்மை அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். முதல் கட்ட ஆன்லைன் தேர்வு ஜுன் 17-ம் தேதியும், 2-வது கட்ட தேர்வு ஜூலை 6 அல்லது 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களிலும் 2-வது கட்ட தேர்வு சென்னையிலும் நடைபெறும்.

சம்பள விவரம் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை (www.rbi.org.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மே 23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், அவற்றுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். குரூப்-பி அதிகாரிகளுக்கு ஆரம்ப நிலையில் ரூ.68 ஆயிரம் அளவுக்கு சம்பளம் கிடைக்கும்.

நேரமும் மதிப்பெண்ணும்

# எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தாளுக்கும் தலா 100 மதிப்பெண்

# தேர்வு நேரம் தலா ஒன்றரை மணி நேரம்

# எழுத்துத் தேர்வானது இரு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படும்.

# முதல்கட்ட தேர்வில் பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதத்திறன், ரீசனிங் ஆகிய 4 பகுதிகளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.