ரிசர்வ் பேங்கில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ரிசர்வ் பேங்கில் ஜாப் ரெடி!

நமது நாட்டின் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய நாட்டின் நிதித்துறையின் மிக முக்கிய பங்காற்றும் ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் முக்கிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இங்கு 526 அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஆமதாபாத்தில் 39, பெங்களூருவில் 58, போபாலில் 45, சண்டிகார் மற்றும் சிம்லாவில் 47, சென்னையில் 10, கவுஹாத்தியில் 10, ஐதராபாத்தில் 27, ஜம்முவில் 19, லக்னோவில் 13, கோல்கட்டாவில் 10, மும்பை, நவி, மற்றும் பனாஜியில் 165, நாக்பூரில் 9, புதுடில்லியில் 27, திருவனந்தபுரத்தில் 47 என மொத்தம் 526 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் மொழி தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 450 ரூபாய்.

கடைசி நாள் : 2017 டிச., 7.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு