காந்தி உருவம் பதித்த 4 ஸ்டாம்ப் 4 கோடிக்கு ஏலம் போனது – அப்படி என்ன சிறப்பு ? – AanthaiReporter.Com

காந்தி உருவம் பதித்த 4 ஸ்டாம்ப் 4 கோடிக்கு ஏலம் போனது – அப்படி என்ன சிறப்பு ?

லண்டனில் பழங்கால அரிய வகை பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படும். இந்த பொருட்கள் அரிய வகையான இருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை ஆர்வம் கொண்டவர்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் அரிய பொருட்களுக்கு ஏலம் தொகையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் அரிய வகை ஸ்டாம்புகள் ஏலம் விட ஏற்பாடுகள் நடந்தன. 1948ம் ஆண்டு ‘சர்வீஸ்’ என்ற வாசகத்துடன் அச்சடிக்கப்பட்ட காந்தியின் படத்துடன், 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்புகளை வாங்க அதிக போட்டி நிலவியது. இறுதியில் நான்கு ‘செட்’ ஸ்டாம்புகள் சுமார் ரூ. 4 கோடியே 14 லட்சத்திற்கு ஏலம் போனது. ஸ்டாம்புகளுக்கு அதிகளவில் ஏலம் போது இதுதான் முதல்முறை என லண்டனை சேர்ந்த விற்பனையாளர் ஸ்டான்லி கிப்பன்ஸ் தெரிவித்தார்.

gandi apr 21

இந்த காந்தி ஸ்டாம்ப் குறித்து மேலும் அறிந்து கொள்ள முயன்றதில் கிடைத்த தகவலிது:

தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948–ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால் தலை சேகரிப்பு தொகுப்பில் உள்ளன. இந்த தொகுப்புதான் உலகின் மிகப்பெரிய அஞ்சல் தலை தொகுப்பு என கருதப்படுகிறது.

மீதி 9 அஞ்சல் தலைகளில் 4 அஞ்சல் தலைகள் ஒரே தாளாக சேர்ந்து உள்ளவை. இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த 4 அஞ்சல் தலைகள்தான் தற்போது 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.