நம்ம தமிழ்நாட்டுக்கு வரும் 20ம் தேதிக்கு மேலே மழை நிச்சயம் வரும்!

நம்ம தமிழ்நாட்டுக்கு வரும் 20ம் தேதிக்கு மேலே மழை நிச்சயம் வரும்!

தமிழகம் தற்போது, கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. இங்குள்ள அணைகள் வறண்டு போனதால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் நிகழ்வாகி வருகிறது. மேலும் , 15 அணைகளில் தற்போது உள்ள நீர்மட்டத்தை வைத்துப் பார்த்தால் அடுத்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் சில தகவல்கள் வெளியாகி மிரட்டி வந்த நிலையில் செனனை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், “அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது. 17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

wether jan 16

அதே சமயம்,”ஜனவரி 20 க்கு மேல் தமிழகத்தில் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் “தமிழக விவசாயிகளின் வேதனை கலந்த மழை இரைஞ்சுதல் கடவுளின் காதுகளில் விழுந்திருக்கலாம். ஏனெனில் ஜனவரி மாதத்தின் கடைசி 10 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழக விவசாயிகளுக்கு விரும்பத் தகுந்த மழைப்பொழிவைத் தரும் ஆற்றல் மிக்க வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வானிலை நிலைய அறிவிப்புகளின் படி பொய்த்துப் போன பின்னும். சைபீரியன் ஹை இப்போதும் வலிமையுடன் இருப்பதால் மேற்கு பசிபிக் பருவக் காற்று தற்போது மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் முந்தைய மழை வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 100 மிமீ அளவில் நீடித்த மழை நிச்சயம்’ என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழக மழைப் பதிவு வரலாற்றில் இதற்கு முந்தைய வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிக மழைப்பொழிவு” என்று தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

இவரது கணிப்பின்படி தமிழகத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் அளவுக்காவது குறைந்த பட்ச மழைப் பொழிவு இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் குடிநீர் பஞ்சம் நீங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுதல்.

error: Content is protected !!