ரயில் கட்டணம் அதிகரிக்கப் போகுது!

ரயில் கட்டணம் அதிகரிக்கப் போகுது!
வரவிருக்கும் பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வருவாயை பெருக்க மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வருகிற 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம்  ஆகிறது. இதன் விளைவாக  ரயில் கட்டணம் உயர்த்தப் படுகிறது.  ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர்  மற்றும் முதல் வகுப்பில் செல்வோருக்குமட்டுமே இந்த கட்டண உயர்வு. ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு 0.5 சதவீதம் கட்டணம் உயர்த்தப் படும். தற்போது சேவை வரி  4.5 சதவீதமாக இருப்பது இனி 5 சதவீதம் ஆகும்.  1000 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் இனி ரூ.1005 கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர பொதுவாகவே ரயில் கட்டணத்தை உயர்த்தவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்ப டாமல் உள்ளது.எனவே இந்த ஆண்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது நிதி யாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றப் போவதால் நவம்பர் மாதத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.எனவே அப்போது இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டின் ரயில் சேவைகளின் இயக்கத்திற்கு எரிபொருள், ஊழியர் சம்பளம் என பல்வேறு பிரிவுகளில் ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான செலவு ஏற்படுகிறது. பயணிகள் ரயில்சேவை மூலம் 57 சதவீதமும் மற்றும் புறநகர் ரயில் சேவைகளின் மூலம் 37 சதவீதமும் வருவாய் கிடைக்கிறது.  ஏசி 3ம் வகுப்பு சேவையில் தான் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது.எனவே ரயில்களில் ஏசி 3ம் வகுப்பு பெட்டிகளை அதிகரிக்கச் செய்வது என்றும், இழப்புகளை சரிக்கட்டி வருவாயை பெருக்கும்வகையில்  கட்டண உயர்வு ஒன்றே சரியான வழி என்றும் ரயில்வே ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.  இந்த அறிக்கை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரயில்களில் பயணம் செய்ய முதியோர், மாணவர்கள், டாக்டர்கள், புற்றுநோய் உள்ளிட்ட சில வகை நோயாளிகள், இன்டர்வியூ செல்வோர், டாக்டர்கள்,நர்சுகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 50  பிரிவினருக்கு ரயில்வே சலுகை கட்டணம் அளிக்கிறது. ஆனால் இதை பலரும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவே இதை தடுப்பதற்காக சலுகை கட்டணம் வேண்டுவோர் இனி ஆதார் அட்டை சமர்ப்பிக்கவேண்டும் என்ற உத்தரவை ரயில்வே பிறப்பித்துள்ளது. இதன்படி வருகிற 1ம் தேதி முதல் ஆதார் அட்டையை காட்டினால் தான் ரயில்களில்கட்டணச் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!