ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை – சர்ச்சை!

ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை – சர்ச்சை!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் பயணம் மேற் கொண்டு  உள்ள நிலையில் அவர் யாத்திரைக்கெல்லாம் செல்லவில்லை, வெளியிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோ ஷாப் புகைப்படங்கள் என்று பாஜகவினரும் சமூக வலைத்தளத்தில் ஒரு சிலரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் .கைலாஷ் மலைக்கு முன்னே ராகுல் காந்தி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் நேற்று வெளியிட்டது. அதனுடன் அவரது மலை யேற்ற விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தது. அதில் 46,333 படிக்கட்டுகள், 203 தளங்கள் அடங்கிய 34.31 கி.மீ. தூரத்தை 463 நிமிடங்களில் கடந்த ராகுல் காந்தி, இதன் மூலம் 4,466 கலோரி கொழுப்பை எரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு  ‘ இந்த கைலாஷ் யாத்திரையின்போது சகலைரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேகமாக முன்னேறி சென்றார். உங்களால் முடியுமா?’ என சவாலும் விட்டுள்ளது.

கைலை மலை அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபு த்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மான சரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும் சிந்து முதலிய நதிகளும் இத் தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இம் மலைக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாட்டு நன்மை வேண்டி சிவ பெருமான் அருளைப் பெற ராகுல் காந்தி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை 12 முதல் 15 நாட்கள் நீடிக்கு எனவும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் அவர் யாத்திரையில் எடுத்தது அல்ல. கூகுளில் இருந்து எடுத்து பதிவிடப்பட்டது என பலரும் பல கருத்து களை தெரிவித்துவன்தனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாச யாத்திரை யில் சக பக்தர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படங்களுடன் வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இந்நிலை யில், அவர் தனது ட்விட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனைத்தும் யாத்திரையில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. யாத்திரை செல்ல இருப்பதால் அவர் அசைவம் உணவுகளை தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது…!

error: Content is protected !!