காங்கிரசின் தலைவாராகிறார் ராகுல்!- சோனியா தகவல்! – AanthaiReporter.Com

காங்கிரசின் தலைவாராகிறார் ராகுல்!- சோனியா தகவல்!

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி உள்ளார். கட்சி தலைவராக உள்ள சோனியாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதால், கட்சிப் பணியை சிறப்பாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

சமீபத்தில், அமெரிக்க சென்ற ராகுல் கட்சி தலைவர் பதவியை ஏற்க தயார் என்று அறிவித்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா நேற்று பங்கேற்றார். பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘கட்சியின் தலைவராக ராகுல் எப்போது பொறுப்பேற்பார் என நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அது இப்போது நிகழப் போகிறது. விரைவில் காங்கிரசின் தலைவராக ராகுல் பொறுப்பேற்பார்’’ என்றார்.