தன் அம்மா சோனியாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸூடன் ராகுல் உருக்கமான சந்திப்பு!.

தன் அம்மா சோனியாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸூடன் ராகுல் உருக்கமான சந்திப்பு!.

சுமார் 49 ஆண்டுகளுக்கு முன் தான் பிறந்த போது பிரவச நேரத்தில் நர்ஸ்சாக பணியாற்றிய கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மாவை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆரத்தழுவிய உருக்கமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியின் ஹோலி பேமிலி மருத்துவமனையில் ராஜம்மா பயிற்சி நர்சாக பணியாற்றினார். 1970 ஆண்டு ஜூன் 19 அன்று ராகுல் அந்த மருத்துவமனையில் பிறந்தார். அந்த பிஞ்சுக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தியவர் ராஜம்மா. பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் அவர் என்பதால் உற்சாகமாகி இருந்தார் ராஜம்மா. பின்னர் அங்கு பயிற்சி முடித்து, ராணுவத்தில் நர்சாக பணியில் சேர்ந்தார். 1987 ல் விருப்ப ஓய்வு பெற்று கேரளா திரும்பினார். தற்போது, வயநாடு தொகுதியில், சுல்தான் பத்தேரி அருகில் உள்ள கல்லுாரில் வசிக்கிறார் ராஜம்மா.

பின்னாளில் ராகுல் அந்த மருத்துவமனையில் பிறந்ததையும், தான் அந்த குழந்தையை முதலில் கையில் ஏந்தியதையும், அடுத்த அறையில் ராஜீவும், சஞ்சயும் பதட்டத்தோடு அமர்ந்திருந்த தையும் பார்ப்போ ரிடம் எல்லாம் இப்போதும் பரவசத்துடன் சொல்லி மகிழ்வது ராஜம்மாவின் பழக்கம்.

கடந்த மக்களவை தேர்தலில் வயநாட்டில் ராகுல் போட்டியிட்டார். அப்போது, ராகுல் இந்தியாவில் பிறக்கவில்லை என்ற சர்ச்சையை சுப்ரமணியசுவாமி எழுப்பியிருந்தார். அப்போது பேட்டியளித்த போது ராஜம்மாள், மேற்கண்ட தகவல்களை கூறி தற்போதும் டெல்லி ஹோலி பேமிலி மருத்துவ மனையில் அந்த ஆவணங்கள் இருக்கிறது என்று அடித்துச் சொன்னார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரை சந்திக்க இயலாத ராகுல், தற்போது வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு சுற்றுப் பயணத்தில் ராஜம்மாவை சந்தித்து மகிழ்ச்சி பெருக்கோடு ஆரத்தழுவிக் கொண்டார்.அப்போது, பிரசவத்தின்போது நடந்த விஷயங்களை ராஜம்மா நினைவுபடுத்த, ராகுல் நெகிழ்ந்துவிட்டாராம். ராகுலுக்கு, கேரளா ஸ்பெஷல் பலாப்பழம் சிப்சை வழங்கினார் ராஜம்மா.

Related Posts

error: Content is protected !!