மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு! – AanthaiReporter.Com

மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு!

பிரதமர் மோடி, அவருடைய நண்பர்களான தொழிலதிபர்களுக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகவும் மட்டுமே பணியாற்றுகிறார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு  மோடி சிறைக்கு போவார்…. என்று பேசிய காங்கிரஸ் தலவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,   தமிழகத்தில் ஸ்டாலின்முதல்வராவார்.. மேலும் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அவரது பேச்சை, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழில் மொழி பெயர்த்து பேசினார்.

ராகுல் பேசிய  போது,  தமிழகத்தில், அமைந்திருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி என்றவர், பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டு, அதை அழித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்றார் உறுதியாக கூறினார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது மோடி ஆட்டிவைக்கும் கைப்பாவை ஆட்சி என்றவர், கடந்த காலத்தில் திமுக – அதிமுக இடையே போட்டி நிலவியது….இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது என்றவர், முன்பு மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது.. ஆனால், இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு நிறுவனங்களையும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சிதைத்து வருவதாக கூறியவர், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்து வருகிறார் என்றார். அதிலும் பிரதமர் மோடி, அவருடைய நண்பர்களான தொழில திபர்களுக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் மட்டுமே பணியாற்றுகிறார்.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை மோடி வழங்கியுள்ளார். திருவள்ளுவர் கூறியபடி உண்மை இறுதியில் வெற்றி பெறும். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார்.

மோடி எங்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால், அது தமிழகத்தில் நடக்காது என்றவர், தமிழக மக்கள் தங்களை வேறொருவர் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மாட்டார்கள் , தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கமே உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும் என்று கூறினார்.