ரகுராம் ராஜன் இங்லிலாந்து வங்கியின் தலைவராகிறார்? – AanthaiReporter.Com

ரகுராம் ராஜன் இங்லிலாந்து வங்கியின் தலைவராகிறார்?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பலமாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இங்கிலாந்து நாட்டின் வங்கி தலைவர் பதவிக்கு பொருத்த மான வர் என்று அதற்காகான- வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

உலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்த ரகுராம்ராஜன், சரவ்தேச பொருளாதாரத்திற்கு வழங்கிய சிறந்த பங்களிப்பிற்காக பல்வேறு உயரிய விருதுகளை வென்றி ருக்கிறார். புகழ்பெற்ற ‘டைம்’ இதழின் 2016ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பேர் பட்டியலி லும் ரகுராம்ராஜன் இடம் பெற்றிருக்கிறார். உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவ ராக திகழும் ரகுராம் ராஜன், முந்தைய காங்கிரஸ் அரசால் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை ரகுராம்ராஜன் மேற்கொண்டு வருகிறார். இந்திய பொருளாதாரத் தின் தற்போதைய ஸ்திரதன்மைக்கு ரகுராம்ராஜன் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

ரகுராம்ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக, அவர் இருமுறை பிரதமர் நரேந்திரமோடிக்கும் கடிதம் எழுதியிருந்தார். ரகுராம் ராஜன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருவதாகவும் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை வேறாக உள்ளது. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி ஏற்கும் முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6 விழுக்காடாக இருந்தது. ஆளுநராக ரகுராம்ராஜன் பொறுப்பேற்ற பின், 2013-14இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 விழுக்காடாகவும், தொடர்ந்து 2015-16இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக் காடாகவும் உயர்ந்தது. 2015-16ம் ஆண்டின் 4வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.9 விழுக்காடாக உள்ளது. இதன்மூலம், உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.

பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி சுப்பிரமணியசாமி கூறிய குற்றச்சாட்டை ஆராய்ந்தோமேயானால், ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம்ராஜன் பொறுப்பேற்பதற்கு முன்பாக நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் மதிப்பு 9.52 விழுக்காடாக இருந்தது. மோடி அரசு 2014 மே மாதம் பதவியேற்கும் போது நுகர்வோர் விலை குறியீட்டு எண் 8.28 விழுக்காடாகவும், 2016 ஏப்ரலில் அது 5.24 விழுக்காடாகவும் குறைந்திருந்தது.

சுப்பிரமணியசாமியின் குற்றச்சாட்டை பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கவில்லை. ரகுராம்ராஜனை நீக்கக்கோரிய சுப்பிரமணியசாமியின் கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட் டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ‘ரகுராம்ராஜன் போன்ற சிறந்த பொருளாதார மேதை யை பெறும் தகுதியை மோடி அரசு பெற்றிருக்கவில்லை’ என்று சிதம்பரம் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம்ராஜன் முழு இந்தியராக செயல்பட மாட்டார் என்ற குற்றச்சாட்டும் முக்கியமானதாக கூறப்பட்டது. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட போதும் இத்தகைய குற்றச்சாட்டு கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி முரளி மனோகர் ஜோஷி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இதுகுறித்து அப்போது பதிலளித்த ரகுராம்ராஜன், தான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டு குடியுரிமை கோரியும் விண்ணப்பிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில்தான் இங்கிலாந்து வங்கியின் தற்போதைய தலைவரான, கனடாவை சேர்ந்த மார்க் கேமே 2019-ல் ஒய்வு பெறுகிறார்.இதையடுத்து அந்த வங்கியின் அடுத்த தலைவராக யார் வருவார் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து , லண்டன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இங்கிலாந்து வங்கியின் அடுத்த தலைவராவதற்கு வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.