உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : ஃபைனலில் வெள்ளி வென்றார் சிந்து!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  போட்டி : ஃபைனலில் வெள்ளி வென்றார் சிந்து!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 24–வது போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு (2017) இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து தொடர்ச்சியாக 2–வது முறையாக இறுதிப் போட்டிக்குள் முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் இதுவரை மோதிய 11 போட்டிகளிலில் கரோலினா மரின் 6 முறையும், சிந்து 5 முறையும் தடவையும் வெற்றி கண்டிருந்தனர். இன்றையை ஆட்டத்தில் பிவி சிந்து அபாரம் காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறையும் வெள்ளி பதக்கமே பெற்றார்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்கள் நடந்து வரும் இந்தத் தொடரின் கடைசி நாளான இன்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து மற்றும் ஸ்பெயி னின் கரோலினா மரின் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்தது.

முதல் செட்டின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய சிந்து ஒரு கட்டத்தில் 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். எனினும் அடுத்துச் சிறப்பாக விளையாடிய கரோலினா 8 புள்ளிகளில் 7 புள்ளிகளை கைபற்றி அதிரடி காட்டினார். இறுதியில் கரோலினா மரின் 21-19 என்ற புள்ளிகளில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் கரோலினா மரின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் 5 புள்ளிகளை கைபற்றிய அவர், 11-2 என முன்னிலை வகித்தார். அதன் பின்னர் தொடர்ந்து தனது சிறப்பான விளையாட்டைத் தொடர்ந்த அவர், இறுதியில் 21-10 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை எளிதாக கைப்பற்றினார். இதன் மூலம் சிந்து 19-21, 10-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார், கரோலினா மரின் தங்கப்பதக்கம் வென்றார். இந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் சிந்து வெல்லும் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாகும், இதன் மூலம் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது,.

Related Posts

error: Content is protected !!