ஆா்டிஐ சட்ட வரம்புக்குள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வரும்!

ஆா்டிஐ சட்ட வரம்புக்குள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வரும்!

சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஸ் ஆக்டிவிட்டிஸ் கூட ஆா்டிஐ சட்ட வரம்புக்குள் இடம்பெறும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை, டெல்லி ஐகோர்ட் கடந்த 2010-இல் வழங்கியது. 88 பக்கங்கள் கொண்ட அந்தத் தீா்ப்பில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டுள்ளது. இதன் முலம தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். நீதித் துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் இன்று இந்த தீர்ப்பை  சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.

முன்னதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த 2010ம் ஆண்டு ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் பொது செயலாளர் மற்றும் நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்தான் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகிய 3 நீதிபதிகள் ஒருமனதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். மற்ற 2 நீதிபதிகளான எம்.வி. ரமணா மற்றும் டி.ஒய்.சந்திரசூட் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆர்.டி.ஐ சட்டம் மற்றவர்களை கண்காணிப்பதற்கான சாதனமாக பயன்படுத்தப்படக்கூடாது. வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் போது நீதித்துறையின் சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயரை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாக தன் தீர்ப்பை வாசித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நீதிபதிகள் எப்போதும் தனிமையில் பணியாற்ற முடியாது. அவர்கள் சட்ட விதிமுறைகளின் கீழ் பணியாற்ற வேண்டும். நீதிபதிகள் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் தங்கள் பதவிகளை அனுபவித்து பொதுமக்களுக்கான கடமைகளை செய்ய வேண்டும்’’ என கூறினார்.நீதிபதி சஞ்சீவ் கன்னா நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டும் சமமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார்.

நீதிபதி சஞ்சீவ் கன்னாவுடன் ஒருமித்த தீர்ப்பை வழக்கிய நீதிபதி எம்.வி. ரமணா நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படாமல் பாதுக்காக்கப்பட வேண்டும். தனிமைக்கான உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை இரண்டையும் சமமாக பாவிப்பதற்கான வழியை கண்டறிய வேண்டும் என நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அதே சமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவ லகம் வரும் என்று டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த தீரப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஆா்டிஐ ஆா்வலா் எஸ்.சி.அகா்வால் சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடிய போது, ‘அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப் பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதில் இருந்து விலக இயலாது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அா்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆா்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

error: Content is protected !!