பாங்க் ஆஃப் பரோடாவில் புரொபஷனரி ஆபீசர் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

பாங்க் ஆஃப் பரோடாவில் புரொபஷனரி ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா முக்கியமான வங்கி. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் காலியாக உள்ள 400 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் மணிப்பால் பல்கலையின் சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

bank apr 9

வயது: 1.2.2017 அடிப்படையில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: மணிப்பால் பல்கலை நடத்தும் இந்தப் படிப்புக்கான செலவு ரூ.3.45 லட்சம் ஆகும். இத்துடன் இதர சான்றிதழ் படிப்புகளுக்கான செலவுகளையும் ஏற்க வேண்டியிருக்கும். இந்தப் படிப்பை முடித்து வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்கள் பாங்க் ஆப் பரோடாவில் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெறமுடியும். இந்தப் படிப்புக்கான தேர்ச்சி அப்ஜெக்டிவ் எழுத்துத் தேர்வு மற்றும் டிஸ்கிரிப்டிவ் தேர்வு வாயிலாக இருக்கும். அப்ஜெக்டிவ் எழுத்துத் தேர்வில் ரீசனிங், ஆப்டிடியூட், வங்கி தொடர்புடைய பொது அறிவு, ஆங்கிலம் தேர்வு ஆகிய பிரிவுகள் இருக்கும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் : ரூ.750.

கடைசி நாள் : 2017 மே 1.

விபரங்களுக்கு: ஆந்தை வழிகாட்டி