பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு – AanthaiReporter.Com

பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது. எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

cbsec dec 24

ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது. புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும். இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.
சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.

இந்நிலையில் தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் திட்டம் இல்லை.மக்களின் விருப்பத்திற்கு எதிராக, எந்த மொழியையும் திணிக்க மாட்டோம்’ என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

’சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாயமாக, மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். அதன்படி, முதல் மொழி தாய்மொழி, இரண்டாம் மொழி, ஆங்கிலமும், மூன்றாம் மொழி, ஹிந்தி அல்லது பிற மொழி கற்பிக்கப்பட வேண்டும்’ என, கோத்தாரி கமிட்டி பரிந்துரைத்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ’தமிழகம் நீண்ட காலமாக பின்பற்றி வரும், இரு மொழிகொள்கைக்கு எதிராக, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது’ என, தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர, மற்ற பகுதிகளில் மூன்று மொழி கற்பிக்கும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அமல்படுத்தியுள்ளது; எனினும், தமிழகத்திற்கும், மத்திய அரசு, அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இது குறித்து வலியுறுத்தினார். இந்நிலையில், ’ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம், தமிழகத்தில் கட்டாயமாக்கப்படாது’ என, மத்திய அரசு, நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரகாஷ் ஜாவடேகர், “எந்த ஒரு மாநிலத்தின் மீதும், அவர்கள் விருப்பமின்றி, ஹிந்தி, சமஸ்கிருதம் உட்பட, எந்த ஒரு மொழியையும் திணிக்க மாட்டோம். சி.பி.எஸ்.இ., கமிட்டி பரிந்துரைத்து இருந்தாலும், இந்த விஷயத்தில், மத்திய அரசு, மாநிலங்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படாது. மாணவர்கள் பல மொழிகளை பயில வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், அது, மக்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே செயல்படுத்தப்படும்”இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற பகுதியில் எதிர்ப்பு:

சி.பி.எஸ்.இ., கமிட்டி பரிந்துரைத்த மூன்று மொழி திட்டத்தின் படி, ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலம் தவிர, வேறு ஒரு, தேர்வு மொழியை மாணவர்கள் கற்க வேண்டும்; இது, மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என, அந்த மாநிலங்களிலும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது