கருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி! – AanthaiReporter.Com

கருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்து விசாரித்து விட்டு போனார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதைய டுத்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணா நிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.

இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி காவிரி மருத்துவமனையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது!

பின்னர் ஜனாதிபதி தன் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.