பப்பி – திரை விமர்சனம் – டீன் ஏஜில் ஏற்படும் அது, இது, எது?

பப்பி – திரை விமர்சனம் – டீன் ஏஜில் ஏற்படும் அது, இது, எது?

முன்னொரு காலத்தில் இளம்பெண்கள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள் என்று குத்து மதிப்பாக கண்டறிந்து ‘வீக்கர் செக்ஸ்’ என்றெல்லாம் அவர்களை சொல்லி வந்தார்கள். ஆனால் வலிமையான பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் ஆண்கள்தான், அதிலும் இளவயது ஆண் கள்தான் காச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் காம நோய் என பலத் தரப்பட்ட அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். ஆம்.. பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் காக்கா, குருவி தொடங்கி எந்த உயிரினமும் இயல்பாகக் கடந்து போகும் பதின் பருவம் மனித இனத்தில் பெரும் சிக்கலுக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களில் செயற்கைத் தூண்டல்களும் இல்லை, இயற்கை தேவைக்குத் தடையுமில்லை. ஆனால், மனித சமுதாயத்தில் இதற்கு நேர்மாறாக ஒரு புறம் தொலைக்காட்சிப் பெட்டிகள், திரைப்படங்கள், சுவரொட்டிகள், இதழ்கள், இணையத் தொடர்புகள் போன்றவை வாயிலாகக் காம உணர்வும் காதல் உணர்வும் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மறுபுறம் சமுதாய அமைப்பும் வாழ்க்கை முறையும் அவற்றைத் தவறு எனக் கண்டித்துத் தடை செய்கின்றன. மீறினால் தண்டிக்கின்றன. இந்த விநோதமான சூழல், குழந்தைகளின் பதின் பருவப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அடைப்படையாக கொண்ட படம்தான் ‘பப்பி’..

கதை என்னவென்றால் ஹீரோ வருண் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், தன் வயதுக்கே உரிய சபலத்தால் கல்லூரி வகுப்பறையில் கூட செல்போனில் பலான வீடியோ பார்க்கிறான். அதனால் ஆசிரியையிடம் மாட்டி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இந்த வருண் வீட்டின் மாடி போர்ஷனுக்கு குடி வருகிறார் நாயகி சம்யுக்தா. ம்.. அப்புறமென்ன..? இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சீனியர் நண்பன் யோகிபாபுவின் தூண்டுதல்படி காதலிக்கவும் தொடங்கி விடுகிறார்கள். ஏற்கெனவே பலான புக்ஸ், படம் எல்லாம் பார்த்து காம வெறி தலைக்கேறிய நிலையில் ஒரு கட்டத்தில் நாயகியுடன் உல்லாசமாகி உறவு கொண்டு விடுகிறான். ஆனால் அடுத்த சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் ரகளை ஆகும் என்று நினைத்து பய்ப்படும் இவர்கள் எப்படி அந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதுதான் பப்பி படம்..

பப்பி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ டிரைலர் & முன்னோட்ட க்ளிப்பிங்குகள் மூலம் அச்சச்சோ.. ஷேம் .. ஷேம் என்று சொல்லுமளவு செக்ஸ் சமாச்சாரங்களை மட்டுமே முன்னிலைப் படுத்தி தங்கள் தரத்தை தாழ்த்திக் கொண்டார்கள். ஆனால் முழுப் படத்தில் ஆபாசம் எதுமில்லை. இன்றைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தில் வளரும் ஒரு  காலேஜ் மாணவ, மாணவியின் வாழ்க்கையை கேஷூவலாக சொல்லி இருக்கிறார்கள்.. ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சில் துக்காடா வேடங்களில் நடித்து வந்த வருண், இப்படத்தில் கதாநாயகனாக வருகிறார். நடிப்பு என்ற பெயரில் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் கொடுக்கப்பட்ட ரோலை செய்திருப்பதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். நாயகி சம்யுக்தா ஹெக்டே. கன்னட படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவராச்சே. இதிலும் தனிக் கவம் பெற்று விடுகிறார். இவர்களுடன் யோகி பாபு மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கூடவே ப்ப்பை என்றொரு நாய் நடிப்புதான் டாப்.

மொத்தத்தில் இளசுகளின் ஆசாபாசங்கள், நடத்தை, காதல், அதைத் தொடரும் காமம், ஆர்வ மிகுதியால் உறவு ,அதனால் உருவான கருவை கலைக்க முயலும் போக்கெல்லாம் ரொம்பத் தப்பு என்பதை சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். அதற்க்கான விழிப்புணர்வு படம் என்ற ஃபீலிங்கை கொடுக்கவும் ட்ரை பண்ணி ஜஸ்ட் பாஸ் பண்ணி இருக்கிறார்.

மார்க் 3 / 5

error: Content is protected !!