பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்! – AanthaiReporter.Com

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்!

நமது நாட்டின் மின்சாரம் தொடர்புடைய பல்வேறு தலையாய பணிகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் கேந்திரமான நிறுவனங்களுள் ஒன்றான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்கள் 44ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : எலக்ட்ரிக்கல் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் 40ம், எச்.ஆர்., ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவில் 4ம் சேர்த்து மொத்தம் 44 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2018 மார்ச் 13 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : டிப்ளமோ டிரெய்னி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இரண்டு வருட பி.ஜி., டிப்ளமோ இன் பெர்சனல் மேனேஜ்மென்ட் படிப்பை முழு நேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : டிப்ளமோ டிரெய்னி மற்றும் எச்.ஆர்., அதிகாரி என்ற இரண்டு பிரிவினரும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள். எச்.ஆர்., அதிகாரி பிரிவுக்கு கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தேர்ச்சி முறை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 300 ரூபாய்.

கடைசி நாள் : 2018 மார்ச் 13.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு