பல ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்!

பல ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்!

ஈகோ காரணத்தில் அரசு நிர்வாகமே முடங்கிக் கிடக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல மருத்துவ மனையில் பல ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்க மருத்துவமனை ஆண் ஊழியர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் நகரில் அமைந்துள்ள ஹாசிண்ட்டா டீ லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி திடீரென்று குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் வரையில் அந்த பெண் கருத்தரித்த விவகாரம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பில் டிம்மன்ஸ் அறியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து அவர் தன் பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அதை மருத்துவ நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த மருத்துமனை தொடர்பாக இதற்கு முன் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் குறிப்பாக கடந்த 2013ம் ஆண்டு அந்த மருத்துமனையின் ஊழியர் ஒருவர் 4 நோயாளிகள் குறித்து பாலியல் ரீதியாக கிண்டல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிர்வாகத்திற்கு யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் விஷயம் வெளியான போது அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

டி.என்.ஏ பரிசோதனை 

கோமாவில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியாக மருத்துவமனையில் உள்ள ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு காவல்துறையினர் வாரண்ட் பெற்றுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை ஹாசிண்டா மருத்துவமனை வரவேற்றுள்ளது. காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!