வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்

வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த சனிக்கிழமை போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற அவர் பிறகு அமெரிக்க பயணமானார். அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு புதிய அத்தியாயத்துக்கு வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை, ஜனாதிபதி டிரம்ப்பும் அவரது மனைவியும் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி டிரம்ப்பிற்கு இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற பரிசுப் பொருள்களை வழங்கினார். 52 வருடங்களுக்கு முன்னர், 1965ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவருக்கு தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது இந்தியா. அந்த தபால்தலையின் அசல் முத்திரையை வழங்கினார் மோடி.

ஜனாதிபதி ஆபிரகாம் லின்கன் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இரு தலைவர்களும் பொதுமக்களின் அடிப்படை நன்மைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கூடுதலாக, காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து புகழ்மிக்க தேயிலை மற்றும் தேன், இமாச்சலப்பிரதேசத் திலிருந்து வெள்ளிக் காப்பு ஆகியவை அடங்கிய ஒரு பெட்டியை வழங்கியுள்ளார்.டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து கைகளால் நெய்த சால்வைகளைப் பரிசாக வழங்கியுள்ளார் இந்திய பிரதமர் மோடி. மேலும் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வர அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உங்களை இந்தியாவில் வரவேற்கவும், விருந்து வழங்கவும் எனக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என நம்புகின்றேன்,” என கூறினார்.

பிரதமர் மோடி டிரம்ப் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடபட்டு உள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டியை சந்தித்து பேசினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் பற்றி இருவரும் விவாதித்தனர். பிறகு நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர், அரசி மேக்சிமாவை பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதையடுத்து நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்ர். இந்த கூட்டம் முடிந்து பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!