மோடியின் செல்வாக்கு ஜஸ்ட் பூஜ்யம் மட்டுமே! – டைம்ஸ் பத்திரிகை சர்வே ரிசல்ட்

மோடியின் செல்வாக்கு ஜஸ்ட் பூஜ்யம் மட்டுமே! – டைம்ஸ் பத்திரிகை சர்வே ரிசல்ட்

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களை தேர்வு செய்வதற்காக பிரபல டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு பூஜ்ஜியம் சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

modi apr 18

பிரபல டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை ஆன்லைனின் வாக்கெடுப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது. உலக தலைவர்களால் கவுரவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்ட், முதல் இடத்தையும், கன்னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், போப் பிரான்சிஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து இடங்களில் வந்தனர்.

இந்நிலையில்  இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் 10 இடங்களை பிடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு இதில் பூஜ்ஜியம் சதவீதம் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக அவர், இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற முடியவில்லை.

Related Posts

error: Content is protected !!