நரேந்திர மோடி தன்னோட ட்விட்டர் நேமை மாத்திப்புட்டார்! – AanthaiReporter.Com

நரேந்திர மோடி தன்னோட ட்விட்டர் நேமை மாத்திப்புட்டார்!

நாட்டில் நடக்கும் ஊழல் மற்ரும் சமூக கொடுமைகளை எதிர்த்து யாரெல்லாம் போராடுகிறார் களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பெயரை ’காவலன் நரேந்திர மோடி’ மாற்றியுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.

பார்லிமெண்ட் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களமும் படு சூடு பறக்க ஆரம்பித்துவிட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிலும் ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன் தான்’ என்கிற புதிய பிரச்சார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில்,”உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமை களை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலாளிதான்’’ என்று குறிப்பிட் ருந்தார். இப்படி சொல்லி இருக்கும் பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் தனது பெயரையும் ”காவலன் நரேந்திர மோடி” என்று மாற்றம் செய்துள்ளார்.

இதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா தனது டுவிட்டர் கணக்கில் பெயரை ‘காவலன் அமித்ஷா’ என்று மாற்றியுள்ளார். மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் டுவிட்டரில் தங்கள் பெயருக்கு முன் காவலாளி என்று மாற்றியுள்ளனர்.