கரன்சி களேபரம் ; உங்கக் கருத்தைக் கேட்கிறார் பிரதமர் மோடி! – AanthaiReporter.Com

கரன்சி களேபரம் ; உங்கக் கருத்தைக் கேட்கிறார் பிரதமர் மோடி!

இந்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மீட்கும் பிரச்சினையை பார்லிமெண்டில் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளியால் இரு அவை குளிர் காலக் கூட்டத்தொடர்கள் நேற்றும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் நரேந்திர மோடி மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய விரும்பி ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், “தற்போது ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவில் உங்கள் நேரடி கருத்தை அறிய விரும்புகிறேன். ‘என்எம்ஆப்’ கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளுங்கள்” என கூறி உள்ளார்.

modi survey nov 23

மேலும் கருத்து தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:-

* இந்தியாவில் கருப்பு பணம் இருக்கிறது என கருதுகிறீர்களா?

* ஊழல், கருப்பு பணம் என்னும் தீமைகளை எதிர்த்து போரிட்டு, அழிக்க வேண்டிய அவசியம் உள்ளது என கருதுகிறீர்களா?

* பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை தடை செய்து அரசு எடுத்த நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

* கருப்பு பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

* ஊழலுக்கு எதிராக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சிறப்பா?

மிக நன்றா?

நன்றா?

பரவாய் இல்லையா?

பிரயோஜனம் இல்லையா?

* ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தரமிடுங்கள்.

ஏ. மிகப்பெரியது.

பி. நன்று

சி. எந்த மாற்றமும் வந்துவிடாது.

* கருப்பு பணத்தை, ஊழலை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை உதவுமா?

ஏ. உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

பி. படிப்படியாக நீண்ட காலப்போக்கில் மாற்றம் வரும்.

சி. மிகக் குறைவான மாற்றம்தான் டி. தெரியாது.

* உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, சுகாதார வசதிகள் சாமானிய மக்களை சென்றடையுமா?

ஏ. முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்.

பி. கொஞ்சம் ஒப்புக்கொள்கிறேன்.

சி. எதுவும் கூற இயலாது.

* ஊழல், கருப்பு பணம், பயங்கரவாதம், கள்ள நோட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான எங்களது நடவடிக்கையால் ஏற்படுகிற அவதிகளை மனதில் கொள்கிறீர்களா?

ஏ. இல்லவே இல்லை.

பி. சற்று

சி. ஆமாம்.

* நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் யோசனைகள், கருத்துகள், உள்ளார்ந்த பார்வையை கொண்டிருக்கிறீர்களா?

இவ்வாறு மோடி, கேள்விகளை கேட்டுள்ளார்.