பிளஸ் டூ – ரிசல்ட் விபரம் + ஹெல்ப்லைன்!

பிளஸ் டூ – ரிசல்ட் விபரம் + ஹெல்ப்லைன்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள்.

plus 2 may 12

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம் ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இது 0.7 சதவீதம் கூடுதல் ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.5 ஆகும். 89.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.5%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%.

முக்கிய புள்ளி விவரம்:

பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள்

இயற்பியல் – 187

வேதியியல் – 1,123

உயிரியல் – 221

தாவரவியல் – 22

விலங்கியல் – 4

கணிதம் – 3,656

கணினி அறிவியல் – 1,647

வணிகவியல் – 8,301

கணக்குப்பதிவியல் – 5,597

பிசினஸ் கணிதம் – 2,551

வரலாறு – 336

புள்ளியியல் – 68

நுண்ணுயிரியல் – 5

*1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு “ஏ கிரேடு” வழங்கப்பட்டுள்ளது
*1171 மாணவர்கள் “ஏ கிரேடு” பெற்றுள்ளனர்.
*மாணவர்கள் – 330, மாணவிகள் – 841

*பிளஸ்-2 தேர்வில் 1151-1180க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் 12,283 – ’பி’ கிரேடு
*பிளஸ்-2 தேர்வில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.87%
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% பெற்று முதலிடம்.

*ராமநாதபுரம் 2-வது இடம்-96.77% தேர்ச்சி, ஈரோடு 3வது இடம் 96.69% தேர்ச்சி

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் பின் வருமாறு:-

*கன்னியாகுமரி – 95.75%, நெல்லை – 96.08%, தூத்துக்குடி – 96.44%, ராமநாதபுரம் – 96.77%, சிவகங்கை – 96.18%, தேனி – 95.93%, மதுரை – 93.61%, திண்டுக்கல் – 92.80% *நீலகிரி – 92.06%, திருப்பூர் – 96.05%, கோவை – 95.83%, ஈரோடு – 96.69%, சேலம் – 92.89%, நாமக்கல் – 96.40%, கிருஷ்ணகிரி – 88.02%, தர்மபுரி – 92.23% *புதுக்கோட்டை – 92.16%, கரூர் – 94.96%, அரியலூர் – 88.48%, பெரம்பலூர் – 93.54%, திருச்சி – 95.50%, நாகை – 88.08%, திருவாரூர் – 88.77%, தஞ்சை – 92.47% *விழுப்புரம் – 86.36%, கடலூர் – 84.86%, திருவண்ணாமலை – 91.84%, வேலூர் – 84.99%, காஞ்சிபுரம் – 88.85%, திருவள்ளூர் – 87.57%, சென்னை – 92.99%

இந்நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அரசு வெளியிட்டுள்ள புதிய நடைமுறைப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவ, மாணவியரும், பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் குறைவான மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் மன விரக்தி அடைவதைத் தடுக்க சைல்ட் லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவை முன் முயற்சி எடுத்துள்ளன.

இது குறித்து சைல்ட் லைன் நிர்வாகிகள் கூறியதாவது: மதிப்பெண் குறைந்தால் மாணவ, மாணவியர் இயல்பாகவே மன அழுத்தம், விரக்தி, குழப்பம் போன்ற சூழலுக்கு தள்ளப்படுவர். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தைரியப்படுத்த வேண்டியது கட்டாயம். இதற்காக மாணவ, மாணவியருக்கான இலவச ஆற்றுப்படுத்துதல் சேவை குழு தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு 0422- 2455305 என்ற எண்ணிலும், 104 என்ற எண்ணில் மருத்துவ உதவிக்கும், 9487424223 என்ற எண்ணில் சைல்ட் லைனுக்கும், ஆஷா ஆற்றுப்படுத்துதல் மையத்துக்கு 9865258463 என்ற எண்ணிலும், வழிகாட்டி மனநல மருத்துவ மையத்துக்கு 9865258463 என்ற எண்ணிலும், சுமை தாங்கி தற்கொலை தடுப்பு உதவி மையத்துக்கு 0421 – 2472472 என்ற எண்ணிலும் அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம்

error: Content is protected !!