உயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் ! -வீடியோ!

உயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் ! -வீடியோ!

கை, கால்களைக் கிழித்துக்கொள்ளும் `ப்ளூ வேல் சேலஞ்ச்’, ஓடும் காரிலிருந்து இறங்கி நடன மாடும் `கிகி சேலஞ்ச்’, பக்கெட் நிறைய குளிர்ந்த தண்ணீரை நிரப்பி உடலில் ஊற்றிக் கொள்ளும் ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ போன்றவை சமூக வலைதளங்களில் பரவி இளசுகளை பாடாய்படுத்தியது.

இதுபோன்ற சேலஞ்சுகளில் அவ்வப்போது பிரபலங்களும் ஈடுபட்டதால் பலரையும் ஈர்த்தது. ஆனால், அதன் ஆபத்தை உணராமல் இதுபோன்ற சேலஞ்சுகளில் ஈடுபடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது தான் இந்த ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்.

குறிப்பிட்ட அவ்வீடியோவில் பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை தள்ளி விட ஏதுவாக ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தான இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு பெண் மாணவி பின் தலையில் அடிப்பட்டு இறந்தே போனார் என்று கூட ஒரு தகவல்

அதனால் இந்த சேலஞ்சை, விளையாட்டாக கூட யாரும் ஈடுபடாதீர்கள் எனவும், இதுபோன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்குமாறு பெற்றோர்களுக்கும் வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!