பீகாரில் நடக்கும் புது டைப் சூதாட்டம் : “பிளாட்பார்ம் பிக்ஸிங்” – AanthaiReporter.Com

பீகாரில் நடக்கும் புது டைப் சூதாட்டம் : “பிளாட்பார்ம் பிக்ஸிங்”

‘பிக்ஸிங்’ என்றாலே நம்மில் பலருக்கு, கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் உள்ளடி வேலை என்று தெரிந்திருக்கும். அந்த விளையாட்டு போல் வேறெந்த விளையாட்டுகளில் பெரிதாக பேசும்படி சம்பவங்கள் எதுவும் கிடையாது. ஆனா தற்போது ஊழலுக்கு பேர் போன பீகார் மாநிலத்தில் இருந்து வெளியாகி உள்ள ‘பிளாட்பார்ம் பிக்ஸிங்’ – என்ற புது வகையான பிக்ஸின்ஹ் அதிர்ச்சியடைய செய்து உள்ளது. அதாவது பீகாரில் ரெயில் நிலையங்களை வந்தடையும் ரயில்கள் குறிப்பிட்ட பிளாட்பார்மை அடைய வேண்டும் என்பதற்காகதான் இந்த ‘பிளாட்பார்ம் பிக்ஸிங்’ நடக்கிறது.

ஆம்.. வியாபாரிகள் ரயில் வரும் பிளாட்பார்மை நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில் நிலையத்தில் வியாபாரிகள், விற்பனையை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு ஜஸ்ட் ரூ. 100 லஞ்சம் கொடுத்து கடைசி நேரத்தில் தாங்கள் இருக்கும் பிளாட்பார்மில் ரயிலை நிறுத்தச் செய்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முசாப்பர்நகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே நடைபெற்ற பேரம் தொடர்பான ஆடியோ கிளிப் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடியோ கிளிப்பில் இடம்பெற்று உள்ள உரையாடல்படி ரயில்வே அதிகாரிகள் ரூ. 100க்கு ரெயில் வரும் பிளாட்பார்மை மாற்ற தயாராக உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது.

இதுதொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் குமார் பேசுகையில், “நாங்கள் ஆடியோ கிளிப்களை பெற்று உள்ளோம், ஆதாரங்களையும் பெற்று உள்ளோம். இவை அனைத்தும் வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்க ரயில் நிலையங்களுக்கு வரும் ரயிலை தாங்கள் இருக்கும் பிளாட்பார்மில் நிறுத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. கடைசி நேரத்தில் இது நடக்கிறது. இதுதொடர்பான முதல்கட்ட விசாரணையில் புகார் உண்மைதான் என்பது தெரியவந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். ஆடியோ கிளிப்பில் பிளாட்பார்மை மாற்ற ரூபாய் 100 லஞ்சம் பெறுவது தொடர்பாக உரையாடல் நடக்கிறது என்பதை காட்டுகிறது,” என்றார்.

மேலும் விளக்கமளித்த அவர், “இதையொட்டி தல்கட்ட விசாரணையில் ரெயில் நிலையங்களுக்கு வரும் முக்கியமான ரயில்கள் நிறுத்தும் பிளாட்பார்ம் மாற்றப்படுகிறது. வியாபாரிகள் இரு பெருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்கள், பயணிகள் ரயிலை குறிப்பிட்ட பிளாட்பார்மில் நிறுத்த அதிகாரிகளுடன் பேசுகிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது. வியாபாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் இடையிலான இணைப்பு காரணமாக சோனிபூர் டிவிஷனில் ரயில்கள் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ரெயில்வே அதிகாரிகளும் ஒப்புக்கொண்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு முசாப்பர்பூர் ரெயில் நிலையத்தில் மூன்று ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ரயில்வேயின் கண்காணிப்பு குழு விசாரித்து வருகிறது. முசாப்பர்பூர் ரெயில் நிலையத்தில் எங்களுக்கு ஆதாரம் கிடைத்து உள்ளது. மாநிலத்தில் ரயில் நிலையங்களில் இது எப்படி நடக்கிறது என்பது தொடர்பாக நாங்கள் விசாரிக்கிறோம்” என ராஜேஷ் குமார் கூறிஉள்ளார்.

அத்துடன் ரயில்களை பிளாட்பார்மில் நிறுத்துவதிலும் முறைகேடுகள் நடைபெறுவது காரணமாக இனி ரயில்களை நிறுத்தும் விவகாரத்தில் பிளாட்பார்மை மாற்ற வேண்டும் என்றால் பிராந்திய ரயில்வே தலைமையகத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற முடிவுக்கு ரயில்வே வந்து உள்ளது. ஊழல் இனி நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலைய மாஸ்டர், எந்தஒரு ரயிலையும் நிறுத்த பிளாட்பார்மை மாற்ற ரயில்வே தலைமையகத்தின் அனுமதியை பெற வேண்டும். ரெயில் பிளாட்பார்ம் மாற்றம் தொடர்பாக காரணம் மற்றும் என்ன சூழ்நிலை என்பது தொடர்பாக முழு அறிக்கையையும் சமர்பிக்க வேண்டும் என ராஜேஷ் குமார் கூறிஉள்ளார்.