பெப்பர்ஸ் மார்னிங்!

பெப்பர்ஸ் மார்னிங்!

பெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பெப்பர்ஸ் மார்னிங்’.. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியும் எட்டு நிமிடங்கள் என்கிற அளவில் மூன்று பகுதிகளை கொண்டது..

முதல் பகுதி ‘இன்று ஒரு கதை’.. சமூக சேவகி கற்பகவல்லி என்பவர் தான் இந்த கதைகளை சொல்கிறார் இந்த ‘இன்று ஒரு கதை’யின் சிறப்பம்சமே சரித்திரத்தில் இருந்து ஒரு கதையை எடுத்து அது இன்றைய சூழலில் எப்படி பொருந்திப்போகிறது என்பதை அழகாக விளக்குகிறார். இவருடையை இந்த கதை சொல்லும் முறை டிவிடிக்களாக மாற்றப்பட்டு, யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. இது சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடிய நிகழ்ச்சி.

இரண்டாவது பகுதி ‘யோகம் தரும் யோகா’.. இன்று பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு ‘யோகா’ கற்றுக்கொடுக்க வேண்டும் என அரசாங்கம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டது ‘யோகா’. இந்த நிகழ்ச்சியில். யோகா மாஸ்டர் அனிதா அசோக்குமார் என்பவர் அற்புதமான சூழலில், தனது திறமையான இரண்டு மாணவிகளை வைத்து, தினசரி ஒரு ஆசனம், அதை எளிமையாக செய்வது எப்படி மற்றும் அதன் பலன்கள் என்ன என்பவற்றை, பாமரரும் எளிதாக புரிந்துகொள்ளும் விதமாக கற்றுத்தருகிறார்.

மூன்றாவது பகுதி “ஏற்றம் தரும் மாற்றம்”… வாழ்வை புரிந்து கொள்ளவும்,வாழ்க்கையில் வெற்றி பெறவும்புத்தம் புது நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் எழுத்தாளர், பேச்சாளர், ஊக்குவிப்பாளர் , இயக்குனர், வாழ்வியல் பயிற்சியாளர் என் பன்முகம் கொண்ட சுரேகா விளக்கமளிக்கிறார் . உடல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆராய்ச்சிகளை கண்டறிந்து உந்து சக்தியாக பயிற்சியூட்டும் இந்நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிகழ்ச்சியை சுமையா தொகுத்து வழங்குகிறார் .

Related Posts

error: Content is protected !!