பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருட்டா? – அதெல்லாம் உண்மையில்லையாம்!

பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருட்டா? – அதெல்லாம் உண்மையில்லையாம்!
 பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு  பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். அரசும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கத்தை மாற்றியது. அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதும் முறைசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துவதே பிரதான நோக்கம் என்று அறிவித்தது. இந்த சூழ்நிலையை நிதித் துறை தொழில் நிறுவனங்களான பேடிஎம், மொபிக்விக் போன்றவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன.
குறிப்பாக பேடிஎம் நிறுவனம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. பணமதிப்பு நீக்கம் அறிவித்த அடுத்த நாளே பிரதமர் மோடியை வாழ்த்தி அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரத்தை கொடுத்தது. ரொக்க பரிவர்த்தனை குறைந்ததால் அடுத்த 15 நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் பரிவர்த்தனை எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னரே 15 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த பேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதன் பிறகு இன்னும் அதிகரித்தது. அப்போதிலிருந்து நிதி தொழில்நுட்பத் துறையில் பேடிஎம் நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இந்தியர்கள் டிஜிட்டலுக்கு மாறும் போக்கை சரியாக கணித்து அதற்கேற்றார்போல் உத்திகளை பேடிஎம் வகுத்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்கியது. இந்தியாவில் மிகப் பெரிய தொழில்நுட்பங்ளுடன் கூடிய தொழில்நுட்ப வங்கியாக உருவாக வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பேமென்ட் வங்கியை பேடிஎம் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

மேலும் இந்த பேமென்ட் வங்கியை தொடர்ந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கு இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதனிடையே  பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப் பட்டு  வருவதாக வெளிவரும் செய்திகள் அவதூறானவை என பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது எல்லா இணையத்தளங்களிலும் ஒரு சென்சேஷனல் செய்தியாகிக் கொண்டிக்கும் ஒன்றுதான்   பேடிஎம் தகவல் திருட்டு எனும் செய்தி. அதாவது பணப் பரிமாற்றம் மற்றும் கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளுக்கான பயன்படும் பேடிஎம் எனும் தனியார் சேவை நிறுவனம் தங்களது வடிக்கையளர்களிடம் இருந்து தகவலை திருடுவதாக வந்த செய்தியை அந்த நிறுவனம் அந்த செய்தி போலியானது என மறுத்துள்ளது.

paytm

இது தொடர்பான ட்விட்டர் பதிவில் தகவல் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் முற்றிலும் போலியானது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் 100 சதவிகிதம் பாதுகாப்பிலுள்ளது. சட்ட அமலாக்க துறையின் வேண்டுதலால் அவர்களை தவிர வேறு யாரிடமும் பகிரப்படவில்லை எனவே யாரும் நம்ப வேண்டாம் தொடர்ந்துவரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த பேச்சு  சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது பேடிஎம் நிறுவனத்தின் மீது இந்த குற்றச்சாட்டும் பேடிஎம்மின் பதிலும் பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!