பேடிஎம்-மில் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதி! – AanthaiReporter.Com

பேடிஎம்-மில் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதி!

பேஸ்புக்கின் சார்பு நிறுவனமான வாட்ஸ் ஆப்புக்கு போட்டியாக Paytm குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது. சாப்ட் பேங்க் மற்றும் அலிபாபா ஆகிய வர்த்தக நிறுவனங்களின் சார்பிலான Paytm இந்திய மக்களைக் கவர விமான டிக்கட், உணவக பில் போன்றவற்றை செலுத்தும்போது குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளருக்கு தகவல் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அந்த நிறுவனத்திற்கு சுமார் இரண்டே கால் கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்த மெசேஜ் சேவை மூலம் வாட்ஸ் ஆப் போலவே செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்பும் வசதி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது

தர்போதைய நிலையில் வாட்ஸ் ஆப் செயலி இந்தியாவில் அதிக பயனாளிகளை கொண்டுள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் 100 கோடி பயனாளிகள் உள்ளனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியாவில் மின்னணு வர்த்தக முயற்சிகளில் இறங்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை , வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரைன் ஆக்டன் ச ந்தித்து ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிம் முயற்சியை குறித்து விசாரித்த போது, “பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனம் முதலீடுகளை செய்துள்ளது. எனவே வாட்ஸ் அப்பில் உள்ள வசதிகளை இந்த பேடி எம்மில் கொண்டுவந்தால், அது வாட்ஸ் ஆப் செயலியை விட அதிகமான நபர்களுக்குச் சென்று சேரும். ஏனென்றால் பேடிஎம் செயலியில் பயனாளிகளின் எண்ணிக்கை 23 கோடியாக உள்ளது” என்றனர். ஏற்கெனவே இந்தியாவில் மின்னணு பண பரிமாற்ற சேவையை ஹைக் செயலி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கு 10 கோடி பயனாளிகள் உள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் பேடிஎம் தனது சேவையை விரிவாக்கியுள்ளதுடன், கணிசமான சந்தையையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தகது.