பட்ஜெட் விவாதம் என்ற பெயரில் கூடிய எம்.பி.க்களின் டெல்லி டூட்டி ஓவர்! .

பட்ஜெட் விவாதம் என்ற பெயரில் கூடிய எம்.பி.க்களின் டெல்லி டூட்டி ஓவர்! .

நம் நாட்டிலுள்ள மக்கள் பிரச்னையைப் பற்றி எடுத்துச் சொல்லி தீர்வு காணும் நோக்கில்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. அதிலும் நாடாளுமன்றம் ஆண்டுக்கு 120 நாட்கள் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அப்படி கூடும் போது நாள் ஒன்றுக்கு மக்களவை 6 மணிநேரமும், மாநிலங்க ளவை 5 மணிநேரமாவது குறைந்தபட்சம் நடக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் கடந்த  10 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் தான் நடந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? இங்கிலாந்து நாடாளுமன்றம் கடந்த 15 ஆண்டுகளாக 150 நாட்களும், அமெரிக்க நாடாளுமன்றம் 140 நாட்களும் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கியதில் இருந்து கடந்த 21 நாட்களாக ஒருநாள் கூட இரு அவைகளும் முழுமையாக செயல்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதாவது காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையிலுள்ள பல்வேறு எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் & போராட்டம் நடத்தியதால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முற்றிலும் முடக்கிவிட்டன. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளில் இந்த ஜனநாயகமற்ற செயலால் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர், பாஜக தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதன் அடிப்படையில் நாடாளுமன்றம் முடக்கப்பட்ட 23 நாட்களுக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத ஊதியமாக ரூ.1.4 லட்சம் பெற்று வருகின்றனர், கூட்டத்தொடரின் போது ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் கூடுதலாக பெறுகின்றனர். இதனையும் சேர்த்தால் 1.53 லட்ச ரூபாய் வரை எம்பிக்கள் வருமானமாக பெறுவர். பாஜக கூட்டணி கட்சிக்கு ஏறத்தாழ 400 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது இரு அவைகளும் நடத்தப்பட வேண்டும். அப்படியென்றால் நாள் ஒன்றுக்கு நாடாளுமன்றத்தை நடத்த ரூ.9 கோடி செலவாகிறது. கடந்த 21 நாட்கள் அவை முடக்கத்தினால் ஏறக்குறைய மக்களின் வரிப்பணம் ரூ.190 கோடி வீணாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த பார்லிமெண்ட் முடக்கம் குறித்து நம்மிடம் பேசிய டெல்லி சீனியர் நிருபர் ஒருவர், “காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடந்த 21 நாட்களாக அவையை முடக்கிய அதிமுக எம்.பி.க் களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை; ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்திய தெலங்குதேசம் கட்சிக்கும் நிதி கிடைக்கவில்லை; தெலங்கானா மக்களின் கோரிக்கையும் நிறைவேறவில்லை. பின்பு ஏன் இந்த சம்பிரதாயப் போராட்டத்தையும் கோஷமிடும் சடங்கு களையும் எம்.பி.க்கள் வேண்டுமென்றே செய்ததன் அவசியமென்ன?.

அதிலும் எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பார்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் வேதனைப்படுவதும், அவர்களை ஆற்றுப்படுத்த பேசுவதும், கண்டிப்பதும் ஒவ்வொரு நாளும் ஒரு சடங்காகவே இருந்தது. நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய், மலிவான விலையில் தரமான உணவு, இலவச ரயில் பயணம், 34 முறை இலவச விமானப் பயணம், மாதம் ரூ.2 லட்சம் ஊதியம், இதெல்லாம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்க வழங்கப்படும் சலுகைகள். ஒரு நிறுவனம், இதுபோன்று சலுகைகளை தன் ஊழியருக்கு வாரிக் கொடுத்தும், அந்த ஊழியர் தன் பணியை சரியாக செய்யாமல் இருந்தால், நிச்சயம் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் தானே?. இங்கு நிறுவனத்தின் இடத்தில் இந்திய மக்களையும், ஊழியர்களின் இடத்தில் எம்.பி.க்களையும் வைத்துப் பாருங்கள். மக்களின் வரிப்பணத்தில் இருந்தே எம்.பி.க்களுக்கு சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஆனால் ஆங்கிலம், இந்தி, தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் விவாத நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு தங்களின் வாதத்திறமையை பேச்சுத் திறனைஎடுத்து வைக்கும் எம்.பி.க் கள், அதில் 10 சதவீதத்தைக் கூட நாடாளுமன்றம் நடக்கும் போது அதில் கலந்துகொண்டு, விவாதிப்பதில்லை என்பது வேதனைக்குரியதாகும்.அதிசயமாக என்றாவது நாடாளுமன்றம் ஒழுங்காக நடந்தால் கூட பெரும்பாலான உறுப்பினர்களின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதுதான் நமது நாட்டின் பரிதாபமான நிலை” என்றார்

error: Content is protected !!