பிரான்ஸ் நாட்டில் அமைதி மாநாடு! – பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்பு! – AanthaiReporter.Com

பிரான்ஸ் நாட்டில் அமைதி மாநாடு! – பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

முதலாம் உலக போரின் 100-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டில் நடை பெற்ற அமைதி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவகள் கலந்து கொண்டனர். 1914 ஆம் ஆண்டு உலக நாடுகள் இடையே மூண்ட முதலாம் உலகப் போர் 4 ஆண்டுகளுக்கு பிறகு 1918-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த போரில் பல லட்ச கணக்கானோர் கொல்லப் பட்டனர். முதலாம் உலகப் போர் நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைதி மாநாடு நடைபெற்றது.

மேலும் இதையொட்டி பாரீஸில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிரியா, சவுதி, ஆப்கானிஸ்தான், சீனா, வடகொரியா நாடுகளின் பிரச்சனைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் வர்த்தகம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட 70 உலக நாடுகளின் தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரீஸில் நடந்த உலக அமைதி மாநாட்டின் 100-வது ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் அன்றிரவு அதிபர் டிரம்ப் நாடு திரும்பினார்.

நேற்று நடந்த பகல் விருந்தின் போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் உரையாடினார்.

அப்போது, சிரியா, வர்த்தகம், சவுதி சூழல், பொருளாதாரத் தடைகள், ஆப்கானிஸ்தான், சீனா, வட கொரியா, இடைநிலை-கதிர் அணு ஆயுத ஒப்பந்தம் ஆகியவை குறித்து ஆலோசித்தார்.

பிரான்சில் பெல்லுவூ உட் பேட்டில்ஃபீல்டு பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் திட்டத்தை சனிக்கிழமை பெய்த மழை காரணமாக டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து, அமெரிக்க போர் வீரர்களின் உயிர் தியாகத்தை டிரம்ப் அவமதித்து விட்டதாக விமர்சனம் எழுந்தது.

ஆனால் கனமழை காரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியாத நிலையில், மரைன்-1 விமானம் பறக்க முடியாத சூழலால், பிரான்சில் உள்ள அமெரிக்க கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்தார்.

இதனிடையே பிரான்ஸ் மட்டுமல்லாது அமெரிக்காஇங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் முதலாம் உலக போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேரணியில் அமெரிக்க ராணுவத்தின் 300 பிரிவுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்இதேபோல் வாஷிங்டன் நகரில் அமைக்கப் பட்டுள்ள போர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்   இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள சோவியத் போர் நினைவிடத்தில் முதலாம் உலகப் போரின் நூறாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றதுஇதேபோல் முதலாம் உலக போரில் உயிரிழந்த வீர்ர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றதுஇதேபோல் நார்த்விச் பகுதியில் சுமார் 1 லட்சம் பாப்பி மலர்களை ஆற்றில் விட்டு முதலாம் உலக போரின் 100-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.