மனித சண்டை சூதாட்டங்களை வைத்து பின்னி பின்னி எடுத்திருக்கும் ’பண்டிகை’!

மனித சண்டை சூதாட்டங்களை வைத்து பின்னி பின்னி எடுத்திருக்கும் ’பண்டிகை’!

“கழுகு ” ஹீரோ கிருஷ்ணாவும் ” கயல்” நாயகி ஆனந்தியும் இணைந்து நடிக்க , புது முகமான பெரோஸ் இயக்கத்தில் , அவரது காதல் மனைவி நடிகை விஜயலஷ்மி பெரோஸ், தனது ., “டீ டைம் டாக்ஸ் ” பேனரில் தயாரித்து , “அயூரா சினிமாஸ் ” வெளியீடு செய்திருக்கும் படம்தான் “பண்டிகை.” இந்த ‘பண்டிகை’. ஜூன் 2015இல் ஷூட்டிங் தொடங்கப்  பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருந்து பின்னர் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கினால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நேற்று (ஜூலை 14ஆம் தேதி) ரிலீஸாகியுள்ளது. நாம் புழங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரித்துலே இப்படியும் கூட சூதாட்டம் எல்லாம் நடக்குதா ? என ஆச்சரியப்ப டும் அளவிற்கு மனித சண்டை சூதாட்டங்களை வைத்து பின்னி பின்னி எடுத்திருக்கும் விதத்தில் பார்ப்பவர்களுக்கே கொஞ்சம் ரத்தம் வரும் அளவிற்கு இருக்கிறது. .

சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷட்த்தோட வளர்ந்த ஹீரோ வேலு (கிருஷ்ணா) ஒரு ஸ்டார் ஹோட்டலில் சர்வராக ஒர்க் பண்ணி வருகிறார். அந்த வேலுவுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு லட்சியம் – அதாவது தன்னை அவமானப்படுத்திய அத்தனை பேரும் தன்னை விஷ் பண்ணி மதிக்கற அளவுக்கு ஒரு சாதாரண, கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அது. இதுக்கிடையிலே வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் முனி (“பருத்தி வீரன்” சரவணன்) சூதாட்டம் ஆடுவதில் அம்புட்டு ஆர்வமா இருக்கிறார். அந்த ஆர்வத்தால் தாதா – மதுசூதனன் நடத்தும் கிரிக்கெட் சூதாட்ட குழுவில் ஜாயிண்ட் பண்ணி தொடர்ந்து சூதாடி, அந்த சூதாட்டத்தின் மூலம் தன்னோட வூடு, சொத்து அம்புட்டையும் இழந்து விடுகிறார். இதனாலே அவரோட ஒய்ஃப் கூட, அவரை விட்டு பிரிஞ்சிடறார். இதையடுத்து விட்டதை பிடிக்க சரவணன், தொடர்ந்து முயற்சி செய்து வரும் வேளையில், கிருஷ்ணாவை சந்திக்கிறார். அதுவும் கிருஷ்ணா ஒருவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது அவரை சந்திக்கிறார்.

இதையடுத்து கிருஷ்ணாவிடம் இங்கு போடும் சண்டையை தன்னுடன் வந்து வேறு ஒரு இடத்தில் சண்டை செய்தால்ரெண்டு பேருக்கும் எக்கசசக்கமா பணம் கிடைக்கும் என்று சபலப்பட வைக்கிறார். கிருஷ்ணாவும், தனக்கு பணம் தேவைப்படறதாலே, அந்த சண்டையில் பங்கேற்க ஒத்துக் கொள்கிறார். இப்படி நிஜச் சண்டை போடுபவர்களை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தை மையமாக வைத்து நகரும் கதையில் இருவரும் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கி அந்த மரண அடிகளிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே ‘பண்டிகை’ கதை.

கிருஷ்ணா – இது வரை வந்து போன படங்களில்லெல்லாம் கொஞ்சம் ஓவராக்டிங் கொடுத்து வந்தவரை அவரின் ஃபிரண்ட் பெரோஸ் அடக்கி வாசிக்க வைத்து அடடே சொல்ல வைத்து விட்டார். இன்னு ஓரிரு படங்களை கிருஷ்ணா இதே ஃபெரோஸிடம் அடவைஸ் கேட்டு ஆக்ட் கொடுப்பது அவருக்கு எதிர் காலத்தை கொடுக்கும்.

பருத்தி வீரன் புகழ சரவணனுக்கு இதில் முக்கியமான ரோல். ஒட்டு மொத்தப் படத்தின் கதையே அவரை சுற்றித்தான் நகர்கிறது என்பதை அவரும் அதை உணர்ந்து தன் முழு திறமையைக் கொடுத்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிதின் சத்யா தனித்துத் தெரிகிறார்.

மொத்தத்தில் அடுத்தடுத்து வரக் சீன்களை யூகிக்க முடிந்தாலும் கூட, படத்தின் ஓப்பனிங் காட்சியிலிருந்தே கதையை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்ட முயற்சித்து தன்னை தனித்துக் காட்டி உள்ளார். ஆனால் நம்மூரில் நடக்காத இந்த மனிதச் சண்டை சூதாட்டத்தில் ஆரம்பத்தில் சொன்னது போல் கொஞ்சம் ஓவராக ரத்தம் சிந்த வைத்து பண்டிகை கொண்டாடியதுதான் சலிப்படைய செய்து விட்டது.

மார்க் 5/2.5

error: Content is protected !!