’பள்ளி பருவத்திலே’ நாயகன் நந்தன்ராம் ரியல் காதல் அனுபவம்! – AanthaiReporter.Com

’பள்ளி பருவத்திலே’ நாயகன் நந்தன்ராம் ரியல் காதல் அனுபவம்!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாகவும், நாயகியாக வெண்பா அறிமுகியுள்ள ‘பள்ளி பருவத்திலே’ படத்தில் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன், ஞான சம்பந்தன், வேல்முருகன், E. ராமதாஸ் .காதல் சுகுமார்  உள்பட பலர் நடித்துள்ளனர்.

ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா ‘காதல் கசக்குதய்யா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக, நாயகனைக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘பள்ளி பருவத்திலே’ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

வாசுதேவ் பாஸ்கர், ” தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வி.கே.பி.டி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது” என்றார்.

நாயகனாக அறிமுகமாகும் நந்தன் ராம் தன் பட அனுபவம் குறித்து பேசிய போது, “சின்ன வயசுல எங்க அப்பா மீயுஸிக்கிளாஸ் போக சொன்னார் நான் “டான்ஸ்” கிளாஸ்தான் போவேன்னு அடம் பிடிச்சேன் அப்பா என் ஆர்வத்த புரிஞ்சிகிட்டு என் வழியில விட்டுடார்  நானும் நடிகனா யிட்டேன். முதல் படத்தில் ஒரு நாயகனுக்கு நடன காட்சி, சண்டை காட்சி கிடைப்பது அரிது எனக்கு அது கிடைத்திருக்கிறது. கதைக்கு தேவைபட்டதால் ஒரு சண்டை காட்சி, 5 பாடல்களில் ஒரு பாட்டுக்கு  நடனமும் ஆடியிருக்றேன். எல்லாருக்கும் ‘பள்ளி’ பருவத்தில் காதலித்த  அனுபவம் இருக்கும். எனக்கும் இருந்துச்சு அது ஒரு 6 மாசம் தான் பிறகு அது வயசு கோளறுன்னு புரிஞ்சிகிட்டேன் அது மாதிரி பள்ளி பருவதில் ஏற்ப்படும் காதல் ஒரு இனக்கவர்ச்சி தான். அது கூடாதுன்னு சொல்லும் படம் தான் ” பள்ளி பருவத்திலே.

நான் ‘தளபதி’ விஜய்யின் தீவிர ரசிகன். சின்ன வயசுல இருந்து எனக்கு ‘தளபதி’ விஜய் மேல ஒரு அபிமானம் உண்டு. ‘ரிகர்சல்’ இல்லாமல் நடன காட்சிகளில் அவர் நடனமாடுவார். எதிர் காலத்தில் அவரைப்போல் வர வேண்டும் என்று என்னுடைய ஆசை. படத்தில் எனக்கு தந்தையா  k.s.ரவிக்குமார் எனக்கு தந்தையா நடிச்சிருக்கார் மிகப்பெரிய இயக்குநர் அவர் கூட நான் நடிச்சது எனக்கு கிடைச்ச பாக்கியம். “கஞ்சா கருப்பு” நகைச்சுவை கலந்த கேரக்டர் ரோல் பண்ணியிருக்கார் எனக்கு ஜோடியா “வென்பா” சிறப்பாக நடித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.