ஓல்ட் நோட்டுகளை எண்ணிய பேங்க் ஸ்டாப்புகளுக்கு ஓவர்டைம் பேமண்ட் வரலையாம்! – AanthaiReporter.Com

ஓல்ட் நோட்டுகளை எண்ணிய பேங்க் ஸ்டாப்புகளுக்கு ஓவர்டைம் பேமண்ட் வரலையாம்!

பழைய நோட்டுகளை எண்ணியதற்கு ஓவர்டைம் ஊதியம் தரவே இல்லை என்பதால் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்டிரைக் செய்யப்போவதாகவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

நாடு முழுவதும் ரூ.500,1000நோட்டுகளை கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அரசு தடை செய்தது. பின்னர் பழைய நோ ட்டுகளை வங்கி களில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது. அப்படி குவிந்த நோட்டுகளை வங்கி ஊழியர்கள் எண்ணி, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்காக நள்ளிரவு வரை இருந்து ஓவர்டைம் வேலை செய்ததாகவும், அதற்கான ஊதியத்தை இது வரை தரவே இல்லை என்றும் வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே உடனடியாக ஓ.டி. பணம் தராவிட்டால் வழக்கு தொடருவோம். வேலைநிறுத் தத்திலும் ஈடுபடுவோம் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில வங்கிகள் ஒரு பகுதியை மட்டும் வழங்கி உள்ளன. பல வங்கிகள் எந்தப் பணமும் தரவில்லை. எனவே உடனடியாக ஓ.டி. பணம் தராவிட்டால் வழக்கு தொடருவது… ஸ்டிரைக் செய்வது பற்றி யோசித்து வருகிறோம். சட்டப்படியான நடவடிக்கைகள் மீதே கவனம் செலுத்துகிறோம்என்று அவர் கூறினார்.