நம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்! – AanthaiReporter.Com

நம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்!

எவ்வளவோ கேள்விகள், சந்தேகங்கள், ஷ்யூரிட்டிகளின் கையெழுத்தெல்லாம் கேட்டு பலர் நோகடித்து வேதனையூட்டும் ஒரு பக்கம். அதே சமயம்  2008 தொடங்கி தற்போது வரை 11 நிதி ஆண்டுகளில் 50,000 மேற்பட்ட மோசடி சம்பவங்களின் மூலம் சுமார் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, ஜதின் மேத்தா, சந்தேசரா சகோதரர்கள் போன்ற வர்கள் வங்கிகளில் மோசடி செய்து கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியது நினைவி ருக்கலாம். இது போன்று கடந்த 11 நிதியாண்டுகளில் 50,000க்கும் மேற்பட்ட மோசடிகளின் மூலம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வாயிலாக தெரியவந்துள்ளது.

2008-09 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான 11 ஆண்டுகள் காலகட்டத்தில் மொத்தம் 53,334 மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் மூலம் 2.05 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாரத வங்கியில் ரூ.23,734.74 கோடி (6793 புகார்கள்), HDFC வங்கியில் ரூ.1200.79 கோடி (2497 புகார்கள்), பரோடா வங்கியில் ரூ.12,962.96 கோடி (2160 புகார்கள்), பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.28,700.74 கோடி (2047 புகார்கள்), ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.5301.69 கோடி (1944 புகார்கள்), பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ. 12358 கோடி (1872 புகார்கள்), சிண்டிகேட் வங்கியில் ரூ. 5830 கோடி (1783 புகார்கள், செண்ட்ரல் வங்கியில் ரூ.9041 கோடி (1613 புகார்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் idbi வங்கியில் ரூ.5978 கோடி, ஸ்டேண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் ரூ.1221 கோடி, கனரா வங்கியில் ரூ. 5553 கோடி, யூனியன் வங்கியில் ரூ.11830 கோடி என அந்த பட்டியல் நீள்கிறது. இந்திய வங்கிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு வங்கிகளிலும் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.