நம் நாட்டிலுள்ள 37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை!

நம் நாட்டிலுள்ள  37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை!

நம் நாட்டைப் பொருத்தவரை கல்வித் துறை தனி அமைச்சகமாக இல்லாமல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்பதாக பல துறைகளின் சங்கமமாக உள்ளது.இந்தியாவின் கல்வி வளர்ச்சி என்பது சர்வதேச தரத்துடன் போட்டியிடுவதாக இல்லை என்பதை முன்னரே தெரிவித்திருந்தோம். ஆனால் கல்வி உள்ளிட பிரச்னைகளில் அடிப்படை தேவைகளைக் கவனிக்காமல நுனிப்புல் மேயும் போக்குதான் இன்றளவும் நடக்கிறது.

உதாரணத்திற்கு தற்போது நம் நாட்டிலுள்ள  37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சொல்லலாம். சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் நல்ல முறையில் படிக்க பள்ளிக்கூடங்களில் குடிநீர், மின்சாரம், போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பது அவசியம். இந்நிலையில், நாடு முழுவதும் 37 சதவீத பள்ளிகளில் இன்னும் மின்சார வசதி இல்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா அளித்த பதிலில்,”இந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 37 சதவீத பள்ளிகளில் மின்சார வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. 63 சதவீத பள்ளிகளில் மின் இணைப்பு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 19 சதவீத பள்ளிகளில் மட்டுமே மின்வசதி உள்ளது. தலைநகர் டெல்லி, சண்டிகர், தாதர், நாகர் ஹாவேலி, டாமன், டையூ, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள பள்ளிகளில் 100 சதவீத மின்வசதி உள்ளது.

அசாம், மேகாலயா, மத்திய பிரதேசம், பீகார், மணிப்பூர், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மின் இணைப்பு பெற்ற பள்ளிகளின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் மின்வசதி செய்து கொடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு திட்டங்களின் மூலம், இந்தாண்டு மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரத்து 248 ஆரம்ப பள்ளிகளுக்கும், 12,930 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Posts

error: Content is protected !!