ஒரு கிடாயின் கருணை மனு -திரை விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு -திரை விமர்சனம்

தற்போதைக்கு ஆண்டுதோறும் மினிமம் நூற்றைம்பது படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனால்,  அவற்றில் பத்து படங்கள் இரண்டு வாரத்தைத் தாண்டி ஓடினாலே பெரிய விஷயம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் படம் ரிலீஸான நான்காம் நாளே  சக்சஸ் மீட் வைத்து கொண்டாடுவது பேஷனாகி விட்டது. அதே சமயம் நூறு படங்களாவது தயாரிப்பாளர்கள் தலையில் துண்டைப் போட்டுவிடுகின்றன. கொஞ்சூண்டு படங்கள் சுமாராக ஓடினாலும், தயாரிப்புச் செலவு எகிறிவிடுவதால் லாபம் வருவதில்லை.  ஆக ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ ‘ எப்படி ஜெயிப்பது?’ என்பதெல்லாம் யாருக்கும் புரியாத அளவில் குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல ஆகிவிட்டது தமிழ் சினிமாவின் நிலைமை. பல கோடிகளில் பணம் கொட்டி, டாப் ஸ்டார்கள், நவீனமயமான உயர் தொழில்நுட்பங்கள், வித வித லொகேஷன்கள் என பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படங்கள் பல குப்புற விழுந்து விடுகின்றன. தோல்விக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால், ‘‘ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சரிவிகிதத்தில் கலக்கும்போது தண்ணீர் கிடைத்துத்தான் ஆகவேண்டும். அதேபோல ஈக்வேஷன்களை கரெக்டாக அப்ளை பண்ணுகிற படங்கள் ஜெயித்தே ஆகணும் ‘ என்ற ஃபார்முலாவை கரெக்டாக புரிந்து உருவாகும் படம் ஜெயித்தே ஆகும் சில படங்கள்தான் ஃப்ரூப் பண்ணுகிறது, அந்த வரிசையில் ரசிகர்கள் மனதில் ப்பச்சக்கென்று ஒட்டிக் கொண்டதுதான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

ஒரு கிடாவின் பார்வையில் இருந்து தொடங்குகிறது கதை. கொஞ்சம் லேட்டாக அதாவது 35 வயதில் திருமணமாகும் பேரன் விதார்த்துக்காக, குலதெய்வம் கோயிலுக்கு அந்த கிடாவை நேர்ந்து விட்டிருக்கிறாள், பாட்டி. அந்த கிடா-வை பலியிட்டு விருந்து வைப்பதற்காக ஊர்க்காரர் மற்றும் உறவினர்களை பலரயும் லாரியில் அழைத்துச் செல்கிறார்கள். குல தெய்வ கோயிலுக்கு போகும் வழியில்ல் ஆர்வக்கோளாறில் டிரைவரிடம் கேட்டு, தானே லாரி ஓட்டுகிறார். அந்த நேரத்தில் மொபட்டில் வந்த ஒருவர் மீது லாரி மோதி அவர் இறந்துவிடுகிறார். இதனால், குலசாமி கோயில் பயணம் தடைபடுகிறது. வண்டி ஓட்டியது புதுமாப்பிள்ளை விதார்த் என்பது தெரிந்ததும், அவரைக் காப்பாற்ற பல்வேறு கோணங்களில் உறவினர்கள் யோசிக்கிறார்கள். செத்தவரைப் புதைத்துவிட்டு, பயணத்தைத் தொடர நினைக்கிறார்கள். ஆனால், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. என்பதை படு யதார்த்தமாக சொல்கிறது படம்.

டைரக்டர் சுரேஷ் சங்கையா படு நேர்த்தியாக யோசித்து தயார் செய்த திரைக்கதைதான் படத்தின் முதுகெலும்பு என்றாலும், அதைவிட வலுவான வசனங்களும், அதை நடிகர்கள் பேசும் விதமும் பல இடங்களில் கைத்தட்டலை அள்ளுகிறது. குறிப்பாக் சொல்ல முடியா விட்டாலும் புதுமாப்பிள்ளை விதார்த், அவரது இளம் மனைவி ரவீணா, அரும்பாடு படும் ஹலோ கந்தசாமி, ரவீணாவின் தந்தை ஜெயராஜ், சமையல் மாஸ்டர் சித்தன் மோகன், விதார்த்தின் நண்பன் ெகாண்டி ஆறுமுகம், லாரி உரிமையாளர் செல்வமுருகன், டிரைவர் வீரசமர், வக்கீல் ஜார்ஜ் என ஒவ்வொரும் அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்து, சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். வட்டார வழக்கு உச்சரிப்பு, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள், டைமிங் டபுள்மீனிங் டயலாக்-கை லேடீஸ் கூட கேஷூவலாக அவிழ்த்தி விடுவது என்று படம் முழுவதும் பந்தி வைத்து பரிமறி கொண்டே இருக்கிறார்கள்ள். இரண்டு காட்சிகளில் வரும் டாக்டர் முதல், படம் முழுக்க தலைகாட்டும் ஏழரை வரை, எல்லோருமே சபாஷ் வாங்கிக் கொண்டு போகிறார்கள். அதிலும் வக்கீல் ஜார்ஜ் ஒரு உண்மையை தன் தொழில் பொருட்டு மறைத்து நாலு வருஷ போக்கு வித்திட்டத்தை அருமையாக யதார்த்தமாக காட்சிப்ப்படுத்தி இருக்கிறார்.

ஒன்றரை வருஷமாக குரூப்பாக உட்கார்ந்து அலசி ஆராய்ந்து ரெடி செய்த ஸ்கிரிப்டில் குறைகள் சில பல்வற்றை சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு புளங்காகிதப்பட ஒரு தமிழ் சினிமா மலர்ந்திருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்!

error: Content is protected !!