ஈடிவி பாரத்- தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு!

ஈடிவி பாரத்- தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு!

13 இந்திய மொழிகள்!23 போர்ட்டல்ஸ்!! பெரும் பொருட்செலவில், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மீடியாவாக உருவெடுக்க உள்ள ஈடிவி பாரத்-ன் தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு!

பிரிவு: ஆசிரியர் குழு (News Desk)

பணி இடங்கள்: 10 (13.01.19 அன்றைய நி்லவரப்படி)

தகுதிகள்: இளநிலை பணியிடங்களுக்கு செய்தித்துறை சம்பந்தப்பட்ட ஏதேனுமொரு பட்டப் படிப்போ, பட்டயப்படிப்போ முடித்திருந்தாலே போதுமானது. (அனுபவம் இல்லாவிடினும் பரவா யில்லை) அல்லது செய்தித்துறை தொடர்புடைய பட்டப்படிப்பு அல்லாமல் வேறு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த பட்சம் ஓராண்டாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் செய்தித் துறையில் அனுபவம் பெற்றி்ருக்க வேண்டும்.

செய்தியறிவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் நன்றாக மொழிபெயர்க்கும் திறனும் அவசியம்

மொபைல் ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாவில் ஆர்வமும் அனுபவமும் இருந்தால் விரும்பத்தக்க தகுதியாகும்.

பணியிடம்: ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

ஊதியம்: ₹ 16,000 முதல் ₹47,000 வரை

தேர்வு முறை: 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு (வீடியோ கால்) மூலம் தேர்வு செய்யப்படுவர். 5 ஆண்டுக்குக் குறைவான அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அருகே உள்ள (சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட) ஏதேனுமொரு முக்கிய நகரத்தில் எழுத்துத் தேர்வையும் எழுத வேண்டும்.

கூடுதல் அம்சங்கள்:

முதல் 15 நாள் அலுவலக செலவில் உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

அதன்பிறகும், அலுவலகத்துக்கான போக்குவரத்து (Pick up & Drop) இலவசம்.

நான்கு வேளையும் குறைந்த விலையில் (Tiffin ₹12, Lunch ₹25) தரமான உணவு

சிறப்பம்சங்கள்: செய்தித் துறையின் பல பிரிவுகளிலும் (Desk, Editing, Anchoring) கற்றுத் தேர்வதற்கான சம வாய்ப்பு

வீட்டு வாடகை முதல் அனைத்தும் (cost of living) மிகக் குறைவு.

தொடர்புக்கு:

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுயவிவரக் குறிப்புகளையும், ஊதிய சான்றையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

குறிப்பு: கவரிங் லெட்டரில் தங்கள் படிப்பு, அனுபவம், ஊதியம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை சுருக்கமாக குறிப்பிட்டு அனுப்பவும்.

மேலும் விபரங்களுக்கு 

ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்

error: Content is protected !!