நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக இருக்கும் 453 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு அப்ரென்டிஸ் முடிப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

காலியிட விபரம் : பிட்டரில் 73, டர்னரில் 24, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 83, எலக்ட்ரீசியனில் 77, வயர்மேனில் 63, டீசல் மெக்கானிக்கில் 17, டிராக்டர் மெக்கானிக்கில் 21, கார்பென்டரில் 4, பிளம்பரில் 2, வெல்டரில் 55 இடங்கள் காலியாக உள்ளன. இவை தவிர பாசாவில் 17, மெடிக்கல் லேப் டெக்னீசியன் (பாதாலஜி) & ரேடியாலஜி பிரிவில் 17 இடங்களும் காலியாக உள்ளன.

வயது : 2017 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 14 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். லேப் டெக்னீசியன் பிரிவிற்கு பிளஸ் 2 அளவிலான படிப்புடன் உரிய பிரிவில் சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : என்.எல்.சி., இணையளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின் இதனை பிரிண்ட் அவுட் எடுத்து, உரிய இணைப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள் : 2017 அக்., 7.

முகவரி: துணை பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் – 20, நெய்வேலி – 607803.

விபரங்களுக்கு :  ஆந்தை வழிகாட்டி கல்வி + வேலை

error: Content is protected !!